அரசாங்கம் பதவி துறப்பதை “மக்கள் சக்தி” முடிவு செய்ய முடியாது, கூறுகிறார் அமைச்சர்

 

ministerpeople'spowerபிரதமரை தவிர வேறு எவருக்கும், மக்கள் உட்பட, அரசாங்கத்தை எப்போது கலைக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம் கிடையாது என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார்.

பிரிட்டீஷ் நாடாளுமன்ற முறை ஆட்சியில், புதிய தேர்தல் எப்போது நடத்துவது என்பதை பிரதமர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றாரவர்.

அவ்வாறான நிலையில், தேர்தலுக்கு முன்பாக அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுவது போலியானது என்று அவர் விளக்கமளித்தார்.

தற்போதைய அரசாங்கம் 2018 வரையில் தொடருமா அல்லது இன்று முடிவுக்கு வருமா என்பது முற்றிலும் பிரதமர் நஜிப்பை பொறுத்தது என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் எப்போது ஓய்வு பெறுகிறது என்பதை மக்கள் சக்தி முடிவு செய்ய முடியாது. அதனைச் செய்பவர் பிரதமர். அதற்கு மாறாக எடுக்கப்படும் நடவடிக்கை அரசாங்கத்தைக் கைப்பற்றும் திடீர் நடவடிக்கையாகும் என்றாரவர்.