வான் அசிஸா: நஜிப் மீதான விமர்சனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டம் வேண்டும்

 

Wanaziza'scallfor emergency sessionகடந்த வாரம் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரதமர் நஜிப் பற்றி கூறப்பட்ட விமர்சனங்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ‘நன்கொடை’ என்று கூறப்படும் அமெரிக்க $700 மில்லியன் (ரிம2.6 பில்லியன்) குறித்து அவர் விளக்கம் அளிக்க தவறியத்தைத் தொடார்ந்து அனைத்துலக சமூகம் தெரிவித்திருந்த கடுமையான விமர்சனம் பிகேஆருக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது என்றார் வான் அசிஸா.

சமீபத்தில் பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த ‘நன்கொடை’ குறித்த விசாரணையை முறியடிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்ற கூறிய வான் அசிஸா, இந்த அமெரிக்க $700 மில்லியனை நன்கொடயாக அளித்த அந்த தாராள மனம் படைத்தவர் யார்? எதற்காக அது அளிக்கப்பட்டது? இவற்றை அறிந்து கொள்ள பிகேஆரும் விரும்புகிறது என்றாரவர்.

புத்ரா ஜெயாவில் நடைபெற்ற அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மலேசியாவின் ஊழல் பிரச்சனைகளை உலக அளவிற்கு உயர்த்தியுள்ளன என்று நேற்று டிஎபியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறியதோடு இது குறித்து நஜிப்பின் விளக்கத்தைப் பெறவும் விவாதங்கள் நடத்தவும் நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றார்.