அஸலினா, அம்பிகாவை தேசப்பற்று அற்றவர் என்கிறார்

 

azalinaஓர் அவசர நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்பதை கோருவருதற்கு ஆதரவு திரட்ட அம்பிகா ஓன்லைன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அதனைச் செய்ததற்காக அவரை “தேசப்பற்று இல்லாதவர்” என்று நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சர் அஸலினா ஓத்மான் சாடியுள்ளார்.

நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டிய அளவிலான முக்கியமான பிரச்சனைகள் இல்லாதிருக்கையில் நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்திற்கான தேவை ஏதும் இல்லை என்றார் அஸலினா.

மேலும், நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தை நடத்தி பிரதமர் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற எண்ணுவது பகுத்தறிவுக்குப்புறம்பானதாகும். ஏனென்றால், 222 இருக்கைகளைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பாரிசானும்மு 132 இருக்கைகள் மட்டுமே இருக்கின்றன என்று அந்த அமைச்சர் கூறினார்.

தேசிய மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அம்பிகா தோற்றுவித்துள்ள ஓன்லைன் வேண்டுகோள் சேஞ்.ஒஆர்ஜி (change.org) என்ற அகப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அம்பிகா விடுத்துள்ள வேண்டுகோள்களில் ஒன்று ரிம2.6 பில்லியன் மற்றும் ரிம42 மில்லியன் ஆகியவை நஜிப்பின் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டது பற்றிய விசாரணையின் போது நஜிப் விடுப்பில் செல்ல வேண்டும் என்பதாகும்.

அடுத்து, நஜிப் விடுப்பில் சென்ற ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி இரு தரப்பினரும் அடங்கிய ஓர் ambiga1ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதாகும்.

மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அம்பிகா அவரின் வேண்டுகோளில் கூறியுள்ளார்.

ஒற்றுமை அரசு அமைக்கப்பட்டதிலிருந்து 18 மாதங்களுக்குள் அது தூய்மையான   மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அம்பிகா கூறுகிறார்.

கடந்த ஒரு மாத காலத்தில் அம்பிகாவின் ஓன்லைன் வேண்டுகோளுக்கு 12,531 பேர் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் அஸலினாவுக்கு இந்த வேண்டுகோள் ஜனநாயக கோட்பாட்டிற்கு முற்றிலும் முறணானதாம், ஏனென்றால் அது தேசிய நிலைத்தன்மைக்கு மிரட்டலாக அமைகிறதாம்.

பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த அடிப்படையற்ற வேண்டுகோளை வலுமையாக நிராகரிப்பதாக அஸலினா தெரிவித்துள்ளார்.