ராயர்: ஐஜிபி அரசியல்வாதி போல் நடந்துகொள்ளக் கூடாது

igpshouldnot behave like politician1தேசியத் தலைவர்களின் படங்களை போட்டு மிதித்ததைவிட மிக அருவருப்பான செயல்களில் ஈடுபட்ட அம்னோ மற்றும் அம்னோ சார்ந்த என்ஜிஒ-களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று டிஎபி செரி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என்  ராயர் கூறினார்.

பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவாங் எங்கின் அலுவலகத்திற்கு மனித மல வடிவில் கேக் மற்றும் பெண்களின் உள்ளாடைகளை அனுப்பியது, லிம்மின் ஜாலான் பின்ஹோர்னிலுள்ள தனிப்பட்ட இல்லத்திற்கு முன் பெர்காசா உறுப்பினர்கள் ஈமைச் சடங்கு நடத்தியது மற்றும் 2010 igpshouldnot behave like politician2ஆம் ஆண்டில் பினாங்கு சட்டமன்றத்திற்கு முன் பாரிசான் இளைஞர் பேரணியில் முதலமைச்சரின் படத்தை போட்டு மிதித்து நெருப்பு வைத்தது போன்ற மிகவும் அருவருக்கத்தக்க நடத்தைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

igpshouldnot behave like politician3பெர்சே 4 பேரணியில் பிரதமர் நஜிப் மற்றும் பாஸ் தலைவர் ஆகியோரின் படங்களை மிதித்தவர்களை கைது செய்வதற்கு அவர்கள் பற்றிய தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று போலீஸ் அறிவிப்பு செய்திருந்ததைத் தொடர்ந்து ராயரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி மற்றும் போலீஸ் ஐஜிபி காலிட் அபு பாகார் ஆகியோரிம் கடமை நாட்டில் சட்டத்தை நிலைநிறுத்துவதாகும். அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடக்காமல் அனைத்து மக்களின் நலன்களுக்காகச் செயல்பட வேண்டும் என்று ராயர் மேலும் கூறினார்.