பெர்சே அலுவலகத்துக்கு வெளியில் பெயர்ப் பலகை

signகோலாலும்பூர்  மாநகர்  மன்ற  அதிகாரிகள்  அதன்  அலுவலகத்தைக்  கண்டுபிடிக்க  முடியாமல்  திணறிப்  போனார்கள்  என்பதை  அறிந்து  பெர்சே,  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  அதன்  அலுவலகத்துக்கு  வெளியில் பெர்சே  என்று  பெரிய  எழுத்துகளில்  எழுதப்பட்ட  பெயர்ப்  பலகையை  வைத்துள்ளது.

இந்த ப்  பெயர்ப் பலகையை  முகநூலில்  பதிவேற்றம்  செய்த  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா,  அங்கு  நகர்ப்புற  நல்வாழ்வு,  வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லானுக்கு  சிவப்புக்-கம்பள  வரவேற்பு  கொடுக்கும்  அளவுக்கு  வசதிகள்  கிடையாது  என்பதால்  அதற்காக  மன்னிப்பு  கேட்டுக்கொள்வதாகவும்  குறிப்பிட்டிருந்தார்.

ஆகஸ்ட்  29-30 பெர்சே  4 பேரணி  விட்டுச்  சென்ற  குப்பைகளைத்  துப்புரவு  செய்ததற்கு  ஆன  ரிம65,000க்கான  கட்டணச்  சீட்டை(பில்)  பெர்சே  தலைமையகத்துக்கு  அனுப்ப  முடியாமல்  கோலாலும்பூர்  மாநகர்  மன்ற  அதிகாரிகள்  தடுமாறியதைக்  குறிப்பிட்டு  பெர்சே  அந்த  இலட்சணத்தில்  உள்ளது  என்று  ரஹ்மான்  கேலி  செய்திருந்தார்.

பெர்சே  ஆர்வலர்கள்,  அதிகாரிகள்  பெர்சே  தலைமையகத்துக்கு  வராமல்  பக்கத்து  வீட்டுக்குத்  தவறுதலாகச்  சென்று  விட்டார்கள்  என்று  சுட்டிக்காட்டினார்கள்.

உடனே,  ரஹ்மான்  பெர்சே  அடையாளம்  கண்டுகொள்வதற்கு  வசதியாக  பெரிய  பெயர்ப்  பலகை  வைத்திருக்க  வேண்டும்  என்றார்.

மேலும்,  துப்புரவு  பணிக்கான  கட்டணச்  சீட்டு,  மரியாவுக்கு  எப்படியும்  அனுப்பி  வைக்கப்படும்  என்றும் சொன்னார்.

ஆனால்,  மரியா  ரிம65,000  கட்டணத்தை  பெர்சே  செலுத்தாது  என்றும்  அதை  எதிர்த்து  வழக்கு  தொடுக்கப்படும்  என்றும்  கூறினார்..