2.6பில்லியன் ரிங்கிட் கொடை வழங்கியவர் சவுதியின் அல்-வாலிட் அல்ல

mazஅனைத்துலக  வாணிக,  தொழில்  துணை  அமைச்சர்  அஹமட்  மஸ்லான்,   இரண்டாண்டுகளுக்குமுன்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  வழங்கியது  சவுதி  அராபிய இளவரசர் அல்-வாலிட்  தலால்  அல்ல  என்பதைத்  தெளிவுபடுத்தியுள்ளார்.

பத்திரிகைகள்,  குறிப்பாக இணையச்  செய்தித்  தளமான  ஃப்ரி  மலேசியா  டுடே-யும்  மை  டைம்சும்  தாம்  சொன்னதைத்  தவறாக  அறிவித்து  விட்டதாக  மஸ்லான்  டிவிட்டரில்  தெரிவித்திருந்தார்.

எடுத்துக்காட்டாகத்தான்  துணை  அமைச்சர்  சவூதி  இளவரசரின்  பெயரைக்  குறிப்பிட்டாராம். .

“1/7/15  தொடங்கி  ரிம120 பில்லியனை  நன்கொடையாக  வழங்கப்  போவதாய்  சவூதி  இளவரசர்  அறிவித்திருந்ததை  ஒர்  எடுத்துக்காட்டாகக்  கூறினேன்.  அவர்தான்  பிரதமருக்கு அந்த  நன்கொடையைச்  செய்தார்  என்று  நான்  கூறவில்லை.

“யாராவது  ரிம2.6 பில்லியனைக்  கொடையாக  வழங்குவார்களா  என்று  கேட்பவர்களும்  இருக்கிறார்களே  அவர்களுக்காகக்  கூறிய  உதாரணம்  அது. அதாவது  ரிம120 பில்லியன்  அளவுக்கு  நன்கொடை வழங்கவும்  சிலர்  இருக்கிறார்கள்  என்பதைக் காட்டுவதற்காக  சொல்லப்பட்டது  அது”, என்றாரவர்.