பெர்சே 4 எதிர்ப்பு செஞ்சட்டையினர் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கவில்லை, முஸ்லிம் குழு கூறுகிறது

 

redshirts1பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டிருக்கும் செஞ்சட்டை அணிந்திருக்கும் கூட்டத்தினர் மலாய் முஸ்லிம்களின் கருத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று முஸ்லிம் தொழிலியர்கள் குழு கூறுகிறது.

இனப் போராட்டத்தைத் தூண்டும் எந்த ஒரு நடவடிக்கையையும் உடனடியாக கையாளப்பட வேண்டும். இந்த நிலையற்ற நேரத்தில் அமைதியையும் கட்டுப்பாடையும் நிலைநிறுத்த போலீசார் மீண்டும் தொழிலியப்படி செயல்பட வேண்டும் என்று அக்குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.

(இந்த அரசியல் உயர்குடியினர்) இனத்திற்காகவும் சமயத்திற்காகவும் போராடுவதாகக் கூறிக்கொள்கின்றனர். ஆனால், மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள், முறையற்ற நிருவாகம் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் ஆட்சி செய்வதற்கான சட்டப்பூர்வமான தகுதியை இழந்து விட்டனர் என்று அக்குழு கூறுகிறது.

இஸ்லாமிய நன்னெறி போதனைகளை உண்மையாகப் பின்பற்றி அதிகாரத்தில் தொடர்ந்திருப்பதற்காக சமயத்தைப் பயன்படுத்துபவர்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவதன் மூலம் நாம் நமது பெருமையையும் பெருந்தன்மையையும் திரும்பப்பெற வேண்டும் என்று அக்குழு அதன் நிலைப்பாட்டை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையைக் கீழ்க்கண்ட தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் ஆதரிக்கின்றன:

Muslim Professionals Forum (MPF), Pertubuhan IKRAM Malaysia (IKRAM), Islamic Renaissance Front (IRF), Islamic Medical Association of Malaysia (Imam), Dr Amir Farid Isahak, JIHAD For JUSTICE, We are Malaysians, Malaysian Indian Muslim Action Council, Ipoh Tamil Muslim Development Association, Persatuan Kebajikan Muslim Kinta, G25, Persatuan Promosi Harmoni Malaysia, Angkatan Belia Islam Malaysia (Abim), Pertubuhan Pemuda GEMA Malaysia, Research and Information Centre on Islam (RICOI) and Maszlee Malik, president of IIUM Academic Staff Association.