தியன் சுவா: செஞ்சட்டையினர் பேரணி நடத்த அனுமதியுங்கள்

Letredshirtrallytogoonபிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா செஞ்சட்டையினர் செப்டெம்பர் 16 இல் நடத்தத் திட்டமிட்டிருந்த பேரணியை போலீசார் தடை செய்திருப்பது தமக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டத்திற்கு ஏற்ப போலீசார் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தாம் செஞ்சட்டையினரின் சினமூட்டும் பேச்சுகளால் எரிச்சலடைந்திருந்தாலும், சமுதாயம் இது போன்றவற்றால் அச்சமடைந்து விடக்கூடாது என்றாரவர்.

செஞ்சட்டையினர் அவர்களுடைய பேரணியை நடத்த விடுங்கள். அவர்களுக்கும் சட்டங்களும் அரசமைப்புச் சட்டமும் அளித்துள்ள உரிமைகள் உண்டு என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினரான தியன் சுவா டிவிட் செய்துள்ளார்.
பிகேஆர் மாதர் பிரிவை எதிர்க்கொள்ள வேண்டும்
பெர்சே 4 பேரணியைத் தொடர்ந்து செஞ்சட்டையினர் சீனர்களை குறிவைப்பதால் அவர்கள் முதலில் பிகேஆர் மாதர் இயக்கத்தை எதிர்க்கொள்ள வேண்டும் என்று பிகேஆர் மாதர் பிரிவுத் தலைவர் ஸுரைடா கமாருடின் கூறினார்.

“இது 1எம்டிபி மற்றும் ரிம2.6 பில்லியன் ஊழல் விவகாரங்களைத் திசைதிறுப்புவதற்கான ஒரு தந்திரம். துரதிஷ்டவசமாக, சிறுபான்மையினர் Letredshirtrallytogoon1மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர்.

“ஒரு மலாய்க்காரர் என்ற முறையில், நான் எனது மலாய்க்காரர்-அல்லாத நண்பர்களை தீங்கிலிருந்து பாதுகாப்பேன். “இரத்தத்தில் குளிக்க” விரும்பும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களே, தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் முதலில் கெஅடிலான் வனித்தாவை எதிர்க்கொள்ள வேண்டும்.

“பெர்சே இனவாதத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்ல. அது சுயேட்சையான, நியாயமான தேர்தலைக் கோரும் ஒரு மக்கள் சக்தி. அதிகாரத்தை இழக்கவிருப்பவர்கள் மட்டுமே அதற்கு இனவாதம் பூசி மலேசியர்கள் அவர்களுடைய உரிமைகளைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப் பார்க்கின்றனர், ” என்று சுரைடா கூறினார்.

மலேசியர்கள் அமைதியை விரும்பும் மக்கள். சினமூட்டுகிறவர்கள் சிறிய எண்ணிக்கையினரே என்று அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான சுரைடா மேலும் கூறினார்.