பாஸ் எம்பி: இன அடிப்படையிலான பேரணிகள் வேண்டாம்

mafபல  இனங்கள்  வாழும்  மலேசியா  போன்ற  நாட்டில்  இன  அடிப்படையில்  பேரணி  நடத்துவது ஏற்கத்தக்கதல்ல  என்கிறார்  பாஸ்  எம்பி  மாபுஸ் ஒமார்.

“அது (பேரணி  நடத்துவது)  அவர்களின்  உரிமை. ஆனால், மலேசியா  ஒரு  இனத்துக்குத்தான் உரியது  என்ற  எண்ணம்  கூடாது.

“அது  முடிவில்   இனங்களுக்கிடையில்  பதற்றத்தை  உருவாக்கும்” என்றாரவர்.

மாபுஸ்,  செப்டம்பர்  16  மலேசிய  தினத்தன்று  “மலாய்க்காரர்  கண்ணியம்”  காக்க சிவப்புச்  சட்டையினர்  நடத்தத்  திட்டமிட்டிருக்கும்  பேரணி  பற்றிக்  கருத்துரைத்தபோது  இவ்வாறு  கூறினார்.
பெர்சே  4  பேரணிக்கும்  அதற்கு எதிர்ப்பாக  நடத்தப்படும்  சிவப்புச்  சட்டைப்  பேரணிக்குமிடையில்  நிறைய  வேறுபாடு  இருப்பதாக  மாபுஸ்  குறிப்பிட்டார்.

“மஞ்சள்  சட்டை  பேரணி  மக்கள்  பேரணி. இந்த (சிவப்புச்  சட்டை)ப்  பேரணி  இன  அடிப்படையில்  நடத்தப்படுவது”, என்று  குறிப்பிட்ட  மாபுஸ்  இந்த  வேறுபாட்டை  அதிகாரிகள்  கவனிக்க  வேண்டும்  என்றார்.

“அவர்களின் (ஒன்றுகூடும்)  உரிமையை  நான்  எதிர்க்கவில்லை. அந்த  உரிமை  அவர்களுக்கு  உண்டு.  ஆனால்,  இன  அடிப்படையிலான  பேரணிகளை  ஊக்குவிப்பது  ஆபத்தாகும்”, என்றார்.