செப்டம்பர் 16 பேரணியின் நோக்கம் என்ன? தெளிவுபடுத்துவார்களா சிவப்புச் சட்டைகள்’

sept ‘பிகேஆர்  அமைதிப்  பேரணிகளை  எதிர்க்கவில்லை. ஆனால்,  சிவப்புச்  சட்டைகள்  செப்டம்பர்  16-இல்  பேரணி  நடத்த  விரும்பினால்  பேரணியின்  நோக்கம்  என்பதைத்  தெளிவுபடுத்த  வேண்டும்  என  நினைக்கிறது.

“நாங்கள்  அமைதிப்  பேரணியை  எதிர்ப்பவர்கள்  அல்ல.”,  என  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி  கூறினார்.

“ஆனால்,  பேரணியின்  நோக்கம்  என்னவென்பதை  அவர்கள் தெளிவாக உரைக்க  வேண்டும்”, என்றாரவர்.

சிலாங்கூர்  மந்திரி  புசாருமான  அஸ்மின்,  பெர்சே, தூய்மையான  தேர்தல்,  தூய்மையான  அரசாங்கம்  தேவை  என்ற  கோரிக்கைகளை  முன்வைத்து  பேரணி  நடத்தியது  என்றார்.  ஊழல்  நடவடிக்கைகளை  எதிர்ப்பதாகவும் அது கூறியது.

“ஆனால்,  சிவப்புச்  சட்டை இயக்கத்தினர் அவர்கள்  பேரணி  நடத்துவதன் நோக்கத்தை  இதுவரை  தெரிவிக்கவில்லை”,  என  அஸ்மின்  கூறினார்.