யுபிஎஸ்ஆர் தேர்வு தொடங்கியது

upsrஇன்று  தொடங்கி  மூன்று  நாள்களுக்கு  நாடளாவிய நிலையில்  ஆறாம்  வகுப்பு மாணவர்கள்  யூ.பி.எஸ்.ஆர் தேர்வை எழுதுகின்றனர். சில  இடங்களில்  காற்றின்  தரம்  குறைந்திருப்பதால்  மாணவர்கள் முகமூடி  அணிந்துகொண்டே  தேர்வை  எழுதுகின்றனர்.

நாடு  முழுக்க  455,929 மாணவர்கள் 8.134 தேர்வு  மையங்களில்  இத்தேர்வை  எழுதுவதாகக்  கல்வி  அமைச்சர்  மஹாட்ஸிர்  காலிட்  கூறினார். அவர்கள்  தேர்வு  எழுதுவதை  49,655 பேர்  கண்காணிக்கிறார்கள்.