பெர்சே 4 பேரணியில் கலந்துகொண்டதற்காக போலீசார் தம்மைக் கைது செய்ய விரும்பினால் தாராளமாகக் கைது செய்யலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“அது அவர்களின் உரிமை. கைது செய்வதாக இருந்தால் செய்யுங்கள். இதில் ஒத்துழைக்க என்ன இருக்கிறது”, என மகாதிர் சுபாங் வீமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“பத்திரிகையில் படித்தேன். நான் போவேன். போலீஸ் உங்களை விசாரணைக்கு அழைத்தால் போகத்தான் வேண்டும். மலேசியாவில் அப்படித்தான்”, என்றாரவர்.
பேரணியில் பேசியபோது, அம்னோ தொகுதித் தலைவர்களுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையூட்டு கொடுத்தார் என்று தாம் குற்றஞ்சாட்டியது உண்மைதான் என்று மகாதிர் கூறினார்.
செக் குடியரசு சென்றுவிட்டுத் திரும்பிய மகாதிரை வரவேற்க சுமார் 100 ஆதரவாளர்கள் இன்று காலை 11.15க்கு சுபாங் விமான நிலையம் வந்திருந்தனர்.
இப்போது இந்தச் சிவப்புச் சட்டைப் பேரணிக்கும் கையூட்டு இல்லாமல் எதுவும் நகராது என்பதும் உண்மை தானே!
சபாஷ் மகாதிமிர் அவர்களே! எதிர்க்கட்சி சூரப்புலிகளுக்கே இல்லாத ஒரு தைரியம் உங்களிடம் உள்ளது. பாராட்டுக்கள்!
எத்துனை பேருந்து வழியாக கைக்கு காசும் , உணவும் கொடுத்து கொண்டு வர வேண்டும் பி.என். இப்படி தானே கொண்டு வருகிறார்கள்.
நீங்கள் செய்த வேலைதான் இப்பொழுது உங்கள் பங்காளி செய்து வருகிறார்.உங்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா ககாதிர் ? உங்கள் ஆட்சி காலத்தில் சட்டத்தை உங்கள் கையில் எடுத்து என்னென அட்டுழியம் செய்தீர்.மக்கள் இன்னும் மறக்கவில்லை.
போலிசுக்கு பாராட்டுக்கள் முதலில் இவரை விசாரித்து உள்ள போடுங்கள் .
உன்னை சிறை வைத்தால் அதன் வலி உனக்கு தெரியும்.உன் எதிரிகளை எப்பெடிஎல்லாம் வதைத்தாய்.ஒபெராசி லாலாங் நடத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிறை அடைதாயே மறந்துபோனதோ காக்கா? அன்று நீ செய்த திருவிளையாடல் இன்று உனக்கு ஆரம்பம்.