அபு டாபியில் உள்ள இண்டர்நேசனல் பெட்ரோல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு (ஐபிஐசி) வழங்கப்பட வேண்டிய யுஎஸ்1.4 பில்லியன் காணாமல் போனதற்கு 1எம்டிபி பொறுப்பல்ல என்றால் அந்நிறுவனம் அதை நிரூபிக்க வேண்டும் என்று பெட்டாலுங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார்.
வால் ஸ்திரிட் ஜர்னல் நேற்று வெளியிட்டிருந்த செய்தியில், 1எம்டிபி கணக்குகளில் யுஎஸ்$1.4 பில்லியன் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஐபிஐசி கணக்கில் அது வரவு வைக்கப்படவில்லை எனக் கூறியிருந்தது.
இதற்கு எதிர்வினையாக, யுஎஸ்$1.4 பில்லியன் கொடுக்கப்பட்டதை தன் கணக்குகள் காண்பிப்பதைச் சுட்டிக்காட்டி அப்பணம் என்னவானது என்று ஐபிஐசி சார்பில் தன்னால் விளக்கமளிக்க இயலாது என்று 1எம்டிபி கூறியிருப்பது திருப்திகரமாக இல்லை புவா தெரிவித்தார்.
“1எம்டிபி என்னதான் மறுத்தாலும் யுஎஸ்1.4பில்லியன் காணாமல்போனது அல்லது கணக்கில் இல்லை என்ற உண்மை மாறிவிடாது”, என புவா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
புவாவின் இவ்வறிக்கையானது தீய நோக்கமுடையது என்பதால் இவரின் அறிக்கையை வெளியிடும் இணையத்தளங்கள் எல்லாம் மூடப் பட வேண்டும் என்று MCMC – க்கு பணிக்க ஒரு மந்திரி இந்நேரம் தயாராக இருப்பாரே!. எங்கிருந்துடா பிடித்து வந்தீர்கள் மலேசியாவிற்கு இத்தகைய மூதேவி மந்திரிகளை?
தேனீ, மூதேவிகளை குறை சொல்லாதீர்!! பாரிசானுக்கு வாக்களித்து வாயில் விரலை சூப்பும் மக்களை சொல்லுங்கள்!!!! ஏமாளிகள்!!!
திருடர்கள் நிறைந்த கூட்டம் 1MDB யை திவலாக்கிவிட்டதுக.அரசாங்கம் இவ்விசயத்தை மூடிமறைக்காமல் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவேண்டும்.
அடிமட்டத்தில் உள்ள ம.இ.க. தலைவர்கள் பாமர மக்களிடம் பேசுவதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என்று தெரியாது சிற்றெறும்பு. ஆனால் இவர்கள் சொல்லும் பச்சைப் பொய்யையும் கேட்டுக் கொண்டு இருப்பார்கள் நம் மக்கள் – அனைத்தும் வயதான தாய்மார்கள் தந்தைமார்கள். இவர்கள் ஏழைகள். நாசி பிரியாணி கோழி இறைச்சியுடன் சாப்பாடு கொடுத்து 2 மணி நேரம் உட்கார வைத்து போனான் வந்தான் கதை எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். உண்மையான நாட்டு நடப்பைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு நம் இன பாமர மக்களை ஏமாற்றும் இந்த ம.இ.க. ஐ.பி.எப் தலைவர்களை முதலில் செருப்பால் அடிக்க வேண்டும்.