அக்டோபர் இறுதியில் தாக்கல் செய்யப்படும் 2016 பட்ஜெட்டில் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதுவே சிறு வணிகர்களின் எதிர்பார்ப்பு.
மலேசியாகினி கிள்ளான் பள்ளத்தாக்கில் பல வணிகர்களைத் தொடர்புகொண்டு பேசியது. அவர்கள் அனைவருமே இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த 6 விழுகாட்டு வரியை எண்ணிக் கவலைப்படுவது தெளிவாக தெரிந்தது.
பிரிக்பீல்ட்சில் பலசரக்குக் கடை வைத்துள்ள மல்லிகா வி.அரசு, 6% வரி வந்த பின்னர் வியாபாரம் சரிந்து விட்டதாகக் கூறினார்.
“ரிம5.90ஆக இருந்த ஒரு கிலோ பருப்பு இப்போது ரிம10.90 ஆக விற்கிறது.
“மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஜிஎஸ்டி 0% இருந்தால் நன்றாக இருக்கும்”.
தம் கடை மட்டுமல்ல அவ்வட்டாரத்தில் உள்ள எல்லாக் க்டைகளுமே பாதிக்கப்பட்டிருப்பதாக மல்லிகா தெஇவித்தார்.
செண்டோல், ஐஸ் கச்சாங் விற்கும் சான் வெய் கியோங்- இவரும் பிரிக்பீல்ட்சைச் சேர்ந்தவரே- ஜிஎஸ்டி-யால் சேர்மானப் பொருள்களின் விலை உயர்ந்து விட்டதால் செண்டோல், ஐஸ் கச்சாங் விலையை உயர்ந்த வேண்டியதாகி விட்டது என்றார்.
“ஜிஎஸ்டியால் அவற்றை வாங்குவதற்கு ரிம300 செலவிட வேண்டியுள்ளது.
“ஜிஎஸ்டி 1%, 2% ஆக இருந்தால் பரவாயில்லை. 6% அதிகம்”, என்றார்.
பெட்டாலிங் ஜெயாவில் பானங்களை விற்பனை செய்துவரும் அஹ்மட் அஸாமி ரசாலி,53, ஜிஎஸ்டி-யால் அரசாங்கத்துக்கு நன்மை, மக்களுக்கு நன்மை இல்லை என்று கூறினார்.
“மக்களுக்குத்தான் சுமை. அதனால் நமக்கு நன்மை இல்லை.
“எனக்கு அது சுமையாக இருக்கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து நான்கு மாதங்கள் ஆன பின்னரும் நான் இன்னும் விலையை உயர்த்தவில்லை”, என்றார்.
வியாபாரிகளுக்கு அரசாங்கம் நிதி உதவி அல்லது அலவன்ஸ் வழங்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்று அவரிடம் வினவியதற்கு அவர் நியாயம் பற்றிப் பேசினார்.
“வியாபாரி என்பதால் நிதி உதவி அல்லது அலவன்ஸ் கொடுக்கப்படுவதை நிச்சயமாக விரும்புவேன். ஆனால், மற்றவர்களின் நிலை?
“ஒரு சிலருக்கு மட்டுமே உதவி கிடைப்பது நியாயமல்ல. அரசாங்கம் ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைத்தால் எல்லோருமே பயனடைவாரக்ள்”, என்றாரவர்.
நாங்க வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கின்றோம். தேவையான பொருட்களை மட்டும் வாங்குவோம். தேவை இல்லாத செலவு செய்ய மாட்டோம். எங்களுக்கு வரி கட்டுவதிலும் மிச்சம். பணம் செலவளிவதும் மிச்சம். நட்டம் யாருக்கு?
உளுந்து விலை 80 வெள்ளி ஏறி விட்டதாம். நாங்கள் என்னத்த செய்ய என்கிறீர் உணவாக உரிமையாளர் ஒருவர்!
GST – வழி எல்லாம் கொள்ளை அடிக்கவே — மற்ற முதலாம் நாடுகளில் வரிப்பணம் மக்களின் தேவைக்கு உபயோகப்படுத்தப்படும் ஆனால் மூன்றாம் உலகில் ஊழல் வழி அரசியல் அதிகார வர்க்கம் தங்களின் பணப்பையை நிரப்பிக்கொள்ளும்– இது தான் அப்பட்ட உண்மை. கண்ணியம் என்பது இந்த ஈன ஜென்மங்களுக்கு தெரியும் ஆனால் தெரியாது. வேறு என்ன சொல்ல-