சிலாங்கூர் பாஸ், அதன் உறுப்பினர்கள் செப்டம்பர் 16-இல் நடைபெறும் ‘ஹிம்புனான் மாருவா மலாயு’ என்றழைக்கப்படும் சிகப்புச் சட்டைப் பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது எனத் தடை விதித்துள்ளது.
சிலாங்கூர் பாஸ் செயலாளர் முகம்மட் கைருடின் ஒத்மான், அக்கட்சி இன அடிப்படையில் அமைந்த பேரணிகளுக்கு எதிரி என்றார்.
“இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணும் இனவாதப் பேரணிகளை எதிர்க்கிறோம்.
“இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இனவாதத்துக்கு விட்டுக்கொடுக்க முடியாது. பாஸின் போராட்டம் இனத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல”, என்று அவர் ஒர் அறிக்கையில் கூறினார்.
சிகப்புச் சட்டை என்றால் தடா! மஞ்சள் சட்டை என்றால் தடா! ஹடி சட்டை என்றால் அடா!
அப்படி என்றால் மற்ற மாநில பாஸ் கட்சியினர் கலந்து கொள்ளலாம் என்று சொல்ல வருகிறீர்களா?