டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, 1எம்டிபி பற்றிய தகவலை யுஎஸ் நாளேடான த வால் ஸ்திரிட் ஜர்னலுக்குக் கசியவிட்டவர் என்று தம்மீது பழி போடுவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவான வலைப்பதிவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்றார்.
தேசிய கண்காய்வுத் துறை தயாரித்த இடைக்காலக் கணக்காய்வு அறிக்கை பற்றி பலரும் அறிவர் என புவா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வில் 13 பேர் இருக்கிறோம். என்னை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏன்?
“என்மீது பழி போடுவது வசதியாக இருக்கிறதா?”, என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பியும் பிஏசி உறுப்பினருமான புவா வினவினார். அம்னோ தொடர்புடைய MyKMU.net அவர் கணக்காய்வுத் துறை அறிக்கையை WSJ-க்குக் கசிய விட்டிருப்பாரோ என்று கேள்வி எழுப்பியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது புவா இவ்வாறு கூறினார்.
யார் கசிய விட்டால் என்ன?1MDB ஊழல் உண்மையா இல்லையா?மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது பிரதமர் கடமையல்லவா?
ச்சே சேச்சே சும்மா அமீனோகாரர்கள் மீது மட்டும் பொய் சொல்லாதீர்கள். அவர்கள் எல்லோரும் கணக்கில் ரொம்ப வீக்கு. நீங்களோ கணக்கில் புலி. அதான் உங்கள் மீது பாய்கின்றார்களோ?
மலாய்க்காரர் ஆதரவு வேண்டுமென்றால் சீனர் மீது தான் பழி போட வேண்டும். இது தானே நம் ஊர் அரசியல்!
எலி போல குடைந்துக் கொண்டிருந்தால் நிம்மதி எங்கே?? அதுதான் உம்மை கழற்றி விட துடிக்கிறார்கள்!!!