முன்னாள் பாஸ் உறுப்பினர்கள், பிகேஆரில் சேரலாம் ஆனால் பாஸிலிருந்து பிரிந்து சென்ற அமானா கட்சியில் சேராமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அமானா, பாஸ் கட்சியை “ஒழித்துக்கட்ட” விரும்புகிறது.
பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட் இவ்வாறு கூறினார். தும்பாட் எம்பி கமருடின் ஜாப்பாரும் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தாயிப்பும் பிகேஆரில் சேர்ந்தார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.
“அவர்கள் ஜிஎச்பி (கெராக்கான் ஹராபான் பாரு) அல்லது பார்டி அமானா நெகாராவில் சேராமல் பிகேஆரில் சேர்ந்தது நல்லது.
“ஜிஎச்பி-யும் அமானாவும் பாஸ் அழிந்து போவதைதான் விரும்புகின்றன”, என்றாரவர்.
புதிய மக்கள் கூட்டணியை உடைக்க பாஸ் போடும் தூபம். மக்கள் நீதிக் கட்சி தேர்தல் வரும் வரை தலையை ஆட்டி விட்டு தேர்தல் வந்ததும் பாஸ் கட்சியை கை கழுவ வேண்டும். இல்லையேல் பல்லின மக்கள் வாக்காளர்களாக இருக்கும் இடங்களில் மக்கள் நீதிக் கட்சி தோற்கும். சிலாங்கூரை ஆட்சி செய்யும் தகுதியை இழக்கும்.