தும்பாட் எம்பி கமருடின் ஜாப்பார் பாஸிலிருந்து விலகி பிகேஆரில் சேர்ந்திருப்பதை அடுத்து பிகேஆருடன் உறவுகள் முறித்துக்கொள்ளப்படுமா என்பதை பாஸ் அறிவிக்க வேண்டும்.
பாஸின் பொக்கோக் செனா எம்பி மாபுஸ் ஒமார் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பாஸ் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று பார்டி அமானா ரக்யாட் எனத் தனிக் கட்சி அமைத்த, அதன் எம்பிகள் உள்பட உறுப்பினர்கள் பலருடன் இனி உறவுகள் கிடையாது என்று அறிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“பாஸிலிருந்து விலகி அமானாவில் சேர்ந்தவர்கள், குறிப்பாக எம்பிகள், துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு பாஸ் அவர்களுடன் ஒத்துழைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“இப்போது பிகேஆர் ‘பாஸ் துரோகி’ ஒருவரைச் சேர்த்துக் கொண்டிருப்பதால் அதனுடன் பாஸ் ஒத்துழைக்குமா?”, என்று மாபுஸ் அறிக்கை ஒன்றில் வினவினார்.
இதுவரை நான்கு எம்பிகள் பாஸிலிருந்து விலகி அமானாவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். கமருடின் மட்டுமே பிகேஆருக்குச் சென்றிருக்கிறார்.