அல்டான்துன்யாவின் கொலை பற்றி ஆவணப் படம் தயாரித்த அல் ஜசீரா செய்தியாளர் மேரி என் ஜோலி, அப்படம் தொடர்பில் மலேசிய போலீசார் இன்னும் தம்மைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
“அதனால், அவ்விவகாரம் தொடர்பில் என்னால் மேலும் கருத்துரைக்க இயலாது”, என மலேசியாகினியின் மின்னஞ்சலுக்குப் பதில் அனுப்பி இருந்தார்.
2006 கொலை பற்றிப் புலனாய்வு செய்ய ஜோலி இரண்டாவது முறை மலேசியா வந்தபோது ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
நேற்று, இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் ஜோலியின் ஆவணப்படம் “மக்களிடையே கலவரம் உண்டுபண்ணும்” தன்மையது என்பதால் அதன்மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அல்டான்துன்யா ஆவணப்படம் மக்களிடையே கலவரம் உண்டு பண்ணுமா? அது ஒரு கொலைச் சம்பவம் அவ்வளவு தான். மக்களுக்கும் அந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம்?
ஞாயம் கேட்டால் பிடிபானுங்க
இதற்க்கு முன் மலேசியர்கள் மட்டுமே கேள்வி கேட்டார்கள் ….இன்று உலகமே கேள்வி கேட்க தயாராகிறது .