2016 பட்ஜெட்டில் கல்விக் கட்டணம் குறைய வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

studentபல்கலைக்கழக  மாணவர்களுக்கு  வருமானம்   கிடையாது  என்பதால்  செலவுகளைச்  சரிக்கட்டுவது  தீராத  தலைவலி.

அதனால்  தங்கள்  துயர்தீர 2016  பட்ஜெட்  உதவும்  என்று  அவர்கள்  எதிர்பார்ப்பதில்  வியப்பில்லைதான்.

கல்விக்  கட்டணம்தான்  உயர்வாக  இருக்கிறது  என்றால்  தங்கும்  இடத்துக்கும்  வாடகையாக  நிறைய  கொடுக்க  வேண்டியிருப்பதாக  அங்கலாய்க்கிறார்  மலாயாப்  பல்கலைக்கழக(யுஎம்)  மாணவர்  நூருல்  நடியா  நபிலா  எம்  அர்ஷாட்,21.

“யுஎம்  மாணவர்கள்  தங்குவசதி  இல்லாமல்  தவிக்கிறார்கள். போதுமான  தங்குவசதி  இல்லாததால்  தனியார்  இடங்களில்  வாடகைக்குத்  தங்க  வேண்டிய  கட்டாயத்துக்கு  ஆளாகிறார்கள்.

“கல்விக்  கட்டணம்  உயர்வாக  இருக்கிறது. அத்துடன்  இதுவும்  சேர்ந்து  கொள்கிறது”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

நிலைமை  இப்படி  இருப்பதால்  அரசாங்கம்  பொதுப்  பல்கலைக்கழகங்களின்  கட்டணைத்தைக்  குறைத்தால்  அது  மாணவர்களின்  நிதிச்  சுமை  குறைய உதவியாக  இருக்கும்  என்றார்  நூருல்  நடியா.

“இலவ்ச  கல்வி  என்பது  இயலாத  காரியம். ஆனால்,  கட்டணத்தையாவது  குறைக்கலாமே”, என்றாரவர்.