மலேசியர்களும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மங்கோலிய நாட்டவரான அல்டான்துன்யா வழக்கு முடிந்துவிட்டதாக நினைக்க இயலாது. அதன்மீது முழுமையான விசாரணை நடந்த பிறகுதான் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்.
“அல்டான்துன்யாவின் ஆன்மா சாந்தி அடையாது, நஜிப்பும் மலேசியர்களிடமிருந்தும் உலகத்தாரிடமிருந்தும் மரியாதை, நம்பிக்கை, சட்டப்படியான உரிமை நிலையைப் பெற முடியாது அல்டான்துன்யா கொலைமீது கட்டுப்பாடற்ற விசாரணை ஒன்று நடத்தப்படும்வரை.
“கொலைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும், அக்கொடூரச் செயலுக்குத் திட்டமிட்டவர்கள் இருந்தால் அவர்களையும் அடையாளம் காண வேண்டும்”, என்று லிம் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அல்டான்துன்யா கொலை விவகாரத்தை மீண்டும் கிளறுவது தம்மைக் கவிழ்க்கும் வெளிநாட்டுச் சதியின் ஒரு பகுதி என்றும் அது ஈராக்கின் சடாம் உசேனைக் கனிழ்த்தது போன்றது என்றும் நஜிப் குறிப்பிட்டிருப்பதற்கு லிம் இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
ஈராக் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அமெரிக்கா சடாமைப் பதவி வீழ்த்தியதை நஜிப் சுட்டிக்காட்டி இருந்தார்..
ஆனால், மலேசியர்கள் சொந்தமாகக் கேள்வி அளவுக்குப் புத்திசாலிகள்தான் என்றார் லிம். கொலை பற்றிக் கேள்வி கேட்க வெளிநாட்டவரின் உதவி அவர்களுக்குத் தேவையில்லை.
அல்தாந்துயாவா யாரது ? என பண்றதை எல்லாம் பண்ணிட்டு பச்சை பிள்ளைபோல் தத்தி தத்தி பேசும் நஜிபுக்கா நிம்மதி இருக்காது ?