5 மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் காற்றின் தரம் மோசமடைந்திருந்தது

indஇன்று  காலை  9மணிக்குப்  பதிவான  காற்றுத்  தூய்மைக்கேட்டுக்  குறியீடு(ஏபிஐ)  தீவகற்ப  மலேசியாவிலும்  சரவாக்கிலும் 18  இடங்களில்  காற்று  ஆரோக்கியமற்ற  நிலையில்  இருந்ததைக்  காண்பிக்கிறது.
தீவகற்ப  மலேசியாவில்  மலாக்கா,  நெகிரி  செம்பிலான், சிலாங்கூர்,  கோலாலும்பூர்,  புத்ரா  ஜெயா,  ஜோகூர்  ஆகியவை  புகை  மூட்டத்தால்  பாதிக்கப்பட்டிருந்ததாக  சுற்றுசூழல்  துறை  அதன்  அகப்பக்கத்தில்  கூறியது.

மிகவும்  மோசமாக  பாதிக்கப்பட்டிருந்தது  புக்கிட்  ரம்பாய் (160).  அதற்கு  அடுத்து  மலாக்கா  மாநகர்(169),  போர்ட்  டிக்சன் (147), பந்திங் (144), நீலாய் (142).

காற்றின்  தரம்  ஆரோக்கியம்ற்றிருந்த  மற்ற  இடங்கள்  வருமாறு:  சிரம்பான் (139), மூவார் (136), கிள்ளான் (136), புத்ரா  ஜெயா(132), ஷா  ஆலம் (130), பெட்டாலிங்  ஜெயா (127), பத்து மூடா (115), செராஸ் (110), சமாராஹான் (109), கூச்சிங் (105), பாசிர்  கூடாங் (105), ஸ்ரீ அமான் (103) கோலா  சிலாங்கூர் (101).

Bernama