அவசியம் நேரும்போது யாரையும் நாடு கடத்தும் சிறப்புரிமை அரசாங்கத்துக்கு உண்டு என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார்.
மங்கோலிய நாட்டவரான அல்டான்துன்யா கொலை பற்றி ஆவணப்படம் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த அல் ஜசீரா செய்தியாளர் நாடு கடத்தப்பட்டது பற்றிக் கருத்துரைத்தபோது நூர் ஜஸ்லான் அவ்வாறு குறிப்பிட்டார்.
“யாரையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அத்துடன் அது ஒரு பழைய செய்தி. நடந்து மூன்று மாதங்களாகி விட்டன என்றும் அவர் சொன்னார்.
நாடு கடத்த சிறப்புரிமை அரசாங்கத்திற்கு இருக்கு என்றால் வாங்கிய இலஞ்சத்தை “நன்கொடை” என்று கூறுபவர்களையும் நாடு கடத்த ஓட்டுரிமை உள்ள மக்களுக்கும் உரிமை உள்ளதை மறந்து விட்டு பேசுகின்றீர்கள்.
“நன்கொடை” என்று கூறுபவர்கள் மட்டுமின்றி “நன்கொடை” வாங்கியவர்கள் குடும்பத்தினரின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து மலேசிய குடியுரிமையும் பறிக்க பட்டு இந்நாட்டிலேயே “அகதிகளாய்” அலைய விட வேண்டும்.
அல்ஜசீரா செய்தியாளரை நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு ஆனால் அல்ஜசீரா “MURDER IN MALAYSIA” ஆவணபடத்தை வெளிநாட்டில் தயாரித்து வெளியீடு செய்தால் மலேசிய அரசாங்கத்தின் உரிமை ஒண்ணுமே புடுங்க முடியாது என்பதும் அல்ஜசீராவுக்கும் தெரியும்.