ஐஜிபி: ஜோலிக்குத் தகவலளித்தவர்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கூடும்

jollyஅல்  ஜசீரா  செய்தியாளர்  மேரி  என்  ஜோலி  மங்கோலியப்  பெண்ணான  அல்டான்துன்யாவின்  கொலை பற்றி  ஆவணப்படமொன்றைத்  தயாரிப்பதற்குத்  தகவலளித்து  உதவியதாகக்  கூறிக்  கொள்வோரை  போலீசார்  கண்காணித்து  வருகிறார்கள்.

“ஜோலிக்குத்  தப்பான  தகவல்களைக்  கொடுத்தவர்கள்  பற்றி  எங்களுக்குத்  தெரியும். அவர்களைக்  கண்காணித்து   வருகிறோம்.  அவசியம்  என்றால்  அவர்கள்மீது  நடவடிக்கையு  எடுப்போம்”, என்று  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

இதற்கு  முன்னர்  அவர், ஆவணப்படம் “மக்களிடம்  கலவரத்தை  உண்டுபண்ணக்கூடிய  வகையில்”  அமைந்திருப்பதால்  குற்றவியல்  சட்டம்  பகுதி  505(பி)-இன்கீழ் ஜோலிமீது  விசாரணை  நடத்தப்படும்  என்று  தெரிவித்திருந்தார்.