சிகப்புச் சட்டைப் பேரணியைத் தடுப்பீர்: நஜிப்புக்கு என்ஜிஓ-கள் கூட்டணி கோரிக்கை

otaiஎன்ஜிஓ-களின்  கூட்டணி  ஒன்று  புதன்கிழமை  நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ள  ‘சிகப்புச்  சட்டை’ப்  பேரணியைத்  தடுத்து  நிறுத்தக்  கோரி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குத் திறந்த  மடல்  ஒன்றை  வரைந்துள்ளது.

19 அமைப்புகளின்  ஒப்புதலுடன்  Otai Reformis  வரைந்துள்ள  அக்கடிதம்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  ‘இஸ்லாமிய  அரசு’ (ஐசிஸ்)  போராளிகள்  போன்றவர்கள்  எனக் குறிப்பிட்டு  அப்பேரணியினர்  இனப்  பிரச்னைகளைப்  பற்றிப்  பேசியபோதே  நஜிப்  அதைத்  தடுத்து  நிறுத்தி  இருக்க  வேண்டும்  என்று  கூறிற்று.

“இன  விவகாரங்கள்  இருப்பது  தெரிய  வந்த  முதல்  நாளே  அவர்களின்  தலைவர்களுக்கு எதிராகக்  கடும்  நடவடிக்கையை  டத்தோ  ஸ்ரீ (நஜிப்)  எடுத்திருக்க  வேண்டும்”, என Otai Reformis பேச்சாளர்  முஸ்தபா  மன்சூர்  கையொப்பமிட்டிருந்த  அக்கடிதம்  கூறியது.

Otai Reformis  இன்று  பிரதமர்  அலுவலகத்திடம்  அக்கடிதத்தை  ஒப்படைக்க  முயலும்  என  அதன்  -இன்  இன்னொரு  பேச்சாளரான  ஷைபுல் அரிப்பின் கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.