அரச மலேசிய கடல்படை அதிகாரி லெப்டனண்ட் கமாண்டர் கைருல் இஸ்வான் முகம்மட் கீர்,37, கடல்படைக்குப் பொருள்களை சப்ளை செய்யும் குத்தகையாளரிடமிருந்து ரிம19,000 பெறுமதியுள்ள கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
கைருல் குற்றச்சாட்டை மறுத்தார்.
பொருள் கட்டுப்பாட்டு அதிகாரியான கைருல் அந்த பெல் & ரோஸ் கடிகாரத்தை புக்கிட் பிந்தாங் விற்பனை மையமொன்றில் அந்தக் குத்தகையாளரிடமிருந்து 2013 மே 24-இல் பெற்றுக் கொண்டாராம்.
கைருல்மீது குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடின பட்சம் ஈராண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
நீதிபதி ரோஸ்பயானின் அரிபின், ரிம5,000 பிணையில் கைருலை விடுவித்து வழக்கை ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டார்.
வழக்கு ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் அக்டோபர் 9 நாள் விசாரணைக்கு வரும்.
நல்லா விசாரியுங்க ! “நன்கொடை”யாக இருக்க போவுது !
2.6 பில்லியன் பணம் “நன்கொடை” குற்றமில்லை !
19 ஆயிரம் மதிப்புள்ள கைகடிகாரம் “நன்கொடை” குற்றமா ?
அட தேவுடா !
“நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே”
“ஊழல் கண்ணை திறப்பினும் நன்கொடை நன்கொடையே”
அதுவும் நன்கொடைதானே?. இப்படிப் பட்ட நன்கொடை எல்லாம் இந்நாட்டில் ஊழல் இல்லை!.