அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் நாளை நடைபெறவிருக்கும் சிவப்புச் சட்டை பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்பேரணி எதிர்மறையான தோற்றத்தை அளித்துள்ளது என்றாரவர். மலாய்க்காரர்களின் கௌரவத்தைத் தற்காக்க வேறு நல்ல வழிகள் இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.
மலேசிய தினத்தை நேசம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் வழி கொண்டாட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமரான முகைதின் கூறினார்.
பேரணியின் வழி அதைக் கொண்டாட வேண்டாம், ஏனென்றால், அதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும், அது இனவாதம் என்று வர்ணிக்கப்படும் என்றாரவர்.
மலாய்க்காரர்கள் சரிசமமாக நடத்தப் படுவதில்லை என்பது உண்மையே. ஒரு மலாய்க்காரருக்கு மட்டும் 260 கோடி வெள்ளி, மற்ற மலாய்க்காரர்களுக்கு ஒன்றுமில்லையா?
கூண்டுக் குள்ளயே இருந்துக் கொண்டு கூவிக் கிட்டு இருக்காம வெளியே வந்து கூவினால்தான் எல்லோருக்கும் கேட்கும்…?
நீங்கள் அமைச்சராக இல்லாததால் இப்படி பேசுகிறீர்கள் இல்லாவிட்டால் நீங்கள்தான் முதல் தாண்டவம் ஆடி இருப்பிர்கள் !
இதெல்லாம் நேரத்திற்கு நேரம் பேசும் கலை.