ஜிபிஎம்: நாட்டை மீண்டும் நிருமானிக்க வாரீர்

gbm_logoஎன்றுமே ஒரு சுதந்திரமான, தன்னாட்சி உரிமையுடைய, ஜனநாயாக கோட்பாட்டின்படி தோற்றுவிக்கப்பட்ட, அதன் மக்களிடையே அமைதியை, நல்லிணக்கதை நிலைநிறுத்திய நாடாக மலேசிய திகழும் என்ற மலேசிய தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் இலட்சியத்தால் உந்தப்பட்ட நாம் உயர்ந்த இலட்சியங்கள், நம்பிக்கை மற்றும் பேரார்வம் ஆகியவற்றோடு செப்டெம்பர் 16, 1963 இல் நமது பயணத்தைத் தொடங்கினோம்.

52 ஆம் ஆண்டை எட்டிவிட்ட நாம் நேசிக்கும் நமது நாட்டில் அனைத்தும் நல்லமுறையில் நடைபெறவில்லை நாம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

நாம் நமது பாதையை விட்டு விலகிச் சென்று விட்டதாகத் தெரிகிறது. ஆதரவற்ற நிலையும் நம்பிக்கையின்மையும் நம்மை ஆழ்ந்து கொண்டுள்ளது. நாம் ஏன் இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதற்கு யார் பொறுப்பு என்று வினவுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

நமது நாடு பெருந்துன்பத்தில் ஆழ்ந்துள்ளது. நமது குழந்தைகளுக்காகவும் எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும் நாம் நமது நாட்டை GBM Memoஉடைமையாக்கி குணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாம் நமது நாட்டை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு மறுநிருமானம் செய்வதற்கான சவாலை எதிர்கொள்வதற்கான மனத்திடத்தை கொண்டவர்களாக இருந்தாக வேண்டும்.

ஜிபிஎம் அதன் 15 அம்ச சாசனத்தின் அடிப்படையில் நாட்டை மறுநிருமானம் செய்வதற்கான நடைமுறைகளுக்கு உதவக் கடப்பாடு கொண்டுள்ளது.

இந்தத் தேசிய நாளில், நாம் அனைவரும் – அரசாங்கம், அரசியல்வாதிகள், சிவில் சமுதாயம் மற்றும் மக்கள் – நாம் நேசிக்கும் நமது நாட்டை மீண்டும் நிருமானிப்பதற்கான நம்பிக்கைப் பயணத்தை ஒன்றாக மேற்கொள்ள வேண்டுகோள் விடுகிறோம்.

டான் இயு சிங்
தலைவர், ஜிபிஎம்