தெங்கு ரசாலி: எல்லாம் மலாய்க்காரர்கள் மயம், மிரட்டல் எங்கிருந்து வருகிறது?

 

Kuliknowsnotசிவப்புச் சட்டை பேரணியின் நோக்கம் குறித்து தாம் குழப்பமுற்றுள்ளதாக அம்னோவின் தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி இன்று இன்ஸ்டிடியூட் இன்டெக்கிரிட்டி மலேசியாவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கூறினார்.

“உங்களுக்கு அரசாங்கம் இருக்கிறது. அதற்கு தலைமை ஏற்றிருப்பவர் ஒரு மலாய்க்காரர்; பினாங்கு மாநில அரசு ஒன்றைத் தவிர, மாநில அரசுகளுக்கெல்லாம் மலாய்க்காரர்கள் தலைமை ஏற்றுள்ளனர், அரசு பொதுச் சேவையில் பெரும்பாலானவர்கள் மலாய்க்காரர்கள்.

“இராணுவத்தில் பெரும்பாலானவர்கள் மலாய்க்காரர்கள் மற்றும் நமக்கு மலாய் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். மிரட்டல் எங்கிருந்து வருகிறது என்பது எனக்குத் தெரியவில்லை”, என்று ரசாலி கூறினார்.

பேரணி அமைதியாக நடைபெறும் என்று நம்புவதாக அவர் கூறினார்.