எதற்கு என்று தெரியாமலே கமலநாதன்கள் 220 சிவப்பு டி-சட்டைகளுக்கு ஏற்பாதரவு செய்தார்களாம்

 

kamalanathanredshirtdistributionஇன்று நடைபெறும் சிவப்புச் சட்டை பேரணிக்கு 220 சிவப்பு டி-சட்டைகளுக்கு உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. கமலநாதன் சேவை மையம் ஏற்பாதரவு அளித்த விவகாரம் அதனால் பயன் பெற்ற ஒருவர் அவரது முகநூல் வழியாக நன்றி தெரிவித்துக் கொண்டு மற்றவர்களையும் அச்சேவை மையத்திற்குச் சென்று டி-சட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது வெளியானதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி எதைப்பற்றியது என்று தெரியாமலே தமது அதிகாரிகள் டி-சட்டைகளுக்கும் அலுவலக இடவசதிக்கும் உதவியதாக துணை அமைச்சர் பி. கமலநாதன் விளக்கம் அளித்தார்.

“என்ஜிஒ-களுக்கு உதவும் மனப்பாங்குடனும்  நல்லெண்ணத்துடனும் எனது சேவை மையத்தின்kamalanathanredshirtdistribution1 அதிகாரிகள்  அந்த நிகழ்ச்சி எதைப்பற்றியது என்று தெரியாமல் பொருளுதவிகளும் அலுவலக இடமும் அளித்துள்ளனர்.

“எதிர்காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துவதற்கு நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருப்போம்.

“இன்னொரு இனத்திற்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டும் அல்லது இந்நாட்டின் சட்டங்களுக்கு புறம்பான எந்த ஒரு பேரணியையோ கூட்டத்தையோ நான் ஆதரிப்பது இல்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்”, என்று கமலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மஇகாவும் மசீசவும் இப்பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.