நாடு மலேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில் இன உறவுகள் மோசமடைந்திருப்பது கவலை அளிப்பதாக மெர்டேகா மையத்தின் திட்ட இயக்குனர் இப்ராகிம் சுபியான் கூறினார்.
அம்மையம் பிப்ரவரி 14 தொடங்கி ஜூன் 8வரை நடத்திய ஆய்வு ஒன்றைத் தாக்கல் செய்து பேசிய இப்ராகிம், நாட்டில் அவநம்பிக்கை பெருகியிருக்கிறது என்றார்.
அது மோசமடைந்து தேசிய ஒற்றுமையைப் பாதிக்கும் அளவுக்குச் சென்றிருப்பதுதான் வருத்தமளிக்கிறது.
“2006-இலிருந்து நம்பிக்கை படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து 2015-இல் மோசமடைந்துள்ளது”, என்றாரவர்.
அம்னோ அரசாங்கமே திட்டமிட்டுப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இன உறவுகளை மோசமடைய செய்கிறது என்பது தான் உண்மை. அதுவும் நஜிப் மே 13 ன்றை நினைவில் வைத்துக் கொண்டே செயல்படுகிறார்!
உங்கள் கருத்து சிகப்பு சட்டை பெருச்சாளிகளுக்கு விளங்காது அல்லது காதில் விழாது.எந்த வழியில் நாட்டை முன்னெற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று செயல்படுத்துங்கள்.நாடு பாதாள குழிக்குள் செல்லாமல் இருக்க செயல் முறை உருவாக்குங்கள்.அடுத்த தலைமுறைக்கு நல்ல மலேசியாவை உருவாக்குங்கள்.
சிலரின் பதவி வெறிக்கு அப்பாவி மக்கள் பலி ஆக்கப்படுகிறார்கள் !
இதுதான் எப்போவே தெரிந்ததாட்சே.–இது ஒன்றும் புதிது அல்லவே. ஒருகால் நெருப்பு கோழி மாதிரி தலையை மணலில் புதைத்து வைத்திருந்தால்?