கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் மொராய்ஸின் சடலம்

moraisசெப்டம்பர் 4-இலிருந்து  காணாமல்போய்  தேடப்பட்டு  வந்த சட்டத்துறை  தலைவர் அலுவலக  அதிகாரி  அந்தோனி  கெவின்  மொராய்ஸின்  சடலம்  சுபாங்  ஜெயா  அருகே  இன்று  காலை கண்டுபிடிக்கப்பட்டதாக  தெரிகிறது. காங்கிரிட்டால்  நிரப்பப்பட்ட  ஒரு  எண்ணெய்  பீப்பாயில்  அது  இருந்தது.

சுங்கை  கிளாங்-கை  ஒட்டியுள்ள யுஎஸ்ஜே  வீடமைப்புப்  பகுதியான  பெர்சியாரான்  சுபாங்  மேவா-வில்  காலை  6 மணிக்கு  அது  கண்டுபிடிக்கப்பட்டது.

காலையிலிருந்து  போலீசும் தீயணைப்பு  மற்றும்  மீட்புப்  படை  அதிகாரிகளும்  அப்பகுதிக்குள்  போவதும்  வருவதுமாக  இருந்தனர்.  செய்தியாளர்கள் சடலம்  கண்டெடுக்கப்பட்ட  இடத்துக்கு  அனுமதிக்கப்படவில்லை.  100  மீட்டருக்கு  அப்பால்  அவர்கள்  தடுத்து  நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில்  கெட்ட  நாற்றம்  பரவி  நின்றது.

அங்கிருந்த  கோலாலும்பூர்  சிஐடி  தலைவர்  சைனுடின்  அஹ்மட்டைச்  செய்தியாளர்கள்  அணுகி  விசாரித்தபோது  அது  மொராய்ஸின்  சடலம்தான் என்பதை  உறுதிப்படுத்த  அவர்  மறுத்தார்.  பிற்பகலில்  சுபாங்  ஜெயா  போலீஸ்  தலைமையகத்தில்  செய்தியாளர்  கூட்டம்  நடத்தப்படும்  என்றார்.