சிகப்புச் சட்டையினர் ஊர்வலம் சென்றபோது லோ யாட் மூடப்பட்டது

lowlow 1

 

இன்று  பிற்பகல் மணி  3.30க்கு  சிகப்புச்  சட்டைப்  பேரணியைச்  சேர்ந்த  ஒரு  குழு  பாடாங்  மெர்போக்  செல்லும்  வழியில்  ஜாலான்  புக்கிட்  பிந்தாங்  வழியாகச்  சென்றபோது  லோ  யாட்  பிளாசா  அதன்  தலைவாசலை  மூடியது.

வாடிக்கையாளர்களின்  பாதுகாப்பு  கருதி  அது  மூடப்பட்டதாக  அந்த  விற்பனை மையத்தின்  பொதுத்  தொடர்பு  மேலாளர்  கேரி  லாம்  கூறினார்.

இதனிடையே,  பெட்டாலிங்  ஸ்திரிட்  பேரணி  செல்வதற்குத்  தடைவிதிக்கப்பட்ட  பகுதியாகும். ஆனால்,  பேரணி  பங்கேற்பாளர்கள்  சிலர்  அப்பகுதிக்குள்  நுழைய  முயன்றனர்.  அவர்களைத்  தடுத்து  நிறுத்த  கலகத்  தடுப்புப்  போலீசார்  அங்கு  வந்து  சேர்ந்தனர்.

பிற்பகல்  மணி  மூன்று  அளவில்  பாடாங்  மெர்போக்கில்  40,000-க்கு  மேற்பட்டோர் கூடியிருந்தனர். அவர்கள்  நபிகள்  நாயகத்தின்  புகழ்பாடும்  பாடல்களைப்  பாடினார்கள்.

பின்னர் “தோலாக்  டிஏபி” (டிஏபியை  நிராகரிப்பீர்)  என்றும்  “ஹிடுப்  நஜிப்” (நஜிப்  வாழ்க), “ஹிடுப்  மலாயு”  (மலாய்க்காரர்  வாழ்க)  என்றும்  முழக்கமிட்டனர்.