பெட்டாலிங் தெரு அமைதி கண்டது; வன்செயல் விசாரிக்கப்பட வேண்டும், நஜிப் கூறுகிறார்

 

Najibtwits1இரவு மணி 7.05: கோத்தா கினபாலு – பெட்டாலிங் தெருவில் நடந்த வன்செயல் குறித்து விசாரிக்குமாறு போலீசாரை பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டார்.

“(இது) நடந்திருக்கக்கூடாது. அனைவரும் உத்தரவுக்கு ஏற்ப நடந்து கொண்டிருக்க வேண்டும்”, பிரதமர் நஜிப் டிவிட்டர் செய்தார்.

இதனிடையே, மணி 6.50 அளவில் ஜமால் முகமட் யூனோஸ் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பெட்டாலிங் தெரு வணிகர்களுக்கு எதிராகத் தாம் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் புகார் செய்யப் போவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

“இன்னும் இரு நாட்களில், பெட்டாலிங் தெரு வணிகர்களுக்கு எதிராக அமைச்சு நடவடிக்கை எடுக்கNajibtwits2 வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக நான் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவேன். அவர்களுக்கு (நடவடிக்கை எடுக்க) ஏழு நாட்கள் தரப்படும்.

“அதன் பின்னர், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நான் உங்களை பெட்டாலிங் தெருவுக்குள் இட்டுச் செல்வேன். நான் உறுதி அளிக்கிறேன். இல்லை என்றால், நீங்கள் என் முகத்தில் எச்சில் உமிழலாம்” என்று கூறி அவர் இன்னும் பெட்டாலிங் தெருவுக்குள் நுழைவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தினார்.

ஆனால், அந்த வணிகர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு ஜமால் விளக்கம் அளிக்கவில்லை.

பின்னர், ஜமால் சுமார் 100 ஆதரவாளர்களுடன் ஜாலான் துன் டான் செங் லோக்கை விட்டு புடு சென்ட்ரல் பஸ் நிலையத்தை நோக்கிச் சென்றார்.