நஜிப்: பேரணியில் நிகழ்ந்த இனத்தை இழிவுபடுத்தும் செயல்கள் விசாரிக்கப்படும்

racialஅரசாங்கம்  பாதுகாப்புக்கும்  மற்ற  இனங்களுக்கும்  மிரட்டல்  விடுக்கப்படுவதை,,  மிரட்டல்  விடுப்பவர்கள்  சிகப்புச்  சட்டை  ஆர்ப்பாட்டக்காரர்களாக  இருந்தாலும்கூட  பார்த்துக்  கொண்டிருக்காது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  எச்சரித்துள்ளார்.

“அதனால்தான்  தடைவிதிக்கப்பட்ட  பகுதிக்குள் (பெட்டாலிங்  ஸ்திரிட்)  நுழைய  முயன்ற  கூட்டத்தை  அதிகாரிகள்  கலைத்தனர், அதற்காக  தண்ணீர் பீரங்கிகளையும்  பயன்படுத்த  வேண்டியதாயிற்று.

“போலீசார்  இன  உணர்வுகளைத்  தூண்டிவிட்டவர்களையும்  விசாரித்து  வருகின்றனர். குற்றம்  செய்தவர்கள்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்க்  குற்றம்  சாட்டப்படுவார்கள்”, என நஜிப் அவரது  வலைப்பதிவில்  பதிவிட்டிருந்தார்.