நஜிப்பின் சொத்துகளை முடக்கிவைக்க அனினா நீதிமன்றத்தில் மனு தாக்கல்

aninaலங்காவி  அம்னோ  மகளிர்  உறுப்பினர்  அனினா சாடுடின்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொத்துகளை  முடக்கிவைக்கக்  கோரி  நீதிமன்றத்தில்  மனு  தாக்கல்  செய்துள்ளார்.

அனினா,  பிரதமரின்  சொந்தக்  கணக்கில்  செலுத்தப்பட்ட யுஎஸ்700  மில்லியன்  தொடர்பில்  நஜிப் மீதும்  கட்சியின்மீதும்  வழக்கு  தொடுத்ததை  அடுத்து  அம்னோ  அவரது  உறுப்பியத்தை இரத்துச்  செய்தது. ஆனால்,  அனினா  தாம்  கட்சியிலிருந்து விலக்கப்பட்டதை  எதிர்த்தும்  வழக்கு  தொடுத்துள்ளார்.

அனினாவின்  வழக்குரைஞர்  ஹனிப்  கத்ரி  அப்துல்லா, நஜிப்பின்  சொத்துகளை  முடக்கக்  கட்டளை பிறப்பிக்கக்  கோரும்  மனு  இன்று  காலை  பதிவு  செய்யப்பட்டதாக  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“வழக்கு  முடியும்வரையில்  சொத்துகளை  முடக்கிவைக்கக்  கேட்டுக்  கொண்டிருக்கிறோம்”,  என்றாரவர்.