பெர்சே பேரணிக்குப் பிள்ளையை அழைத்து வந்தது பற்றி எம்பி-இடம் விசாரணை

azmiசிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  அவரின்  பிள்ளையை  பெர்சே 4  பேரணிக்கு  அழைத்து  வந்தது  தொடர்பில்  போலீசார்  அவரிடம்  விசாரணை  நடத்தினர்.

இன்று  டாங்  வாங்கி   போலீஸ்  தலைமையகம்  சென்ற  அவரிடம்  மஞ்சள்நிற  டி-சட்டை  அணிந்து  பேரணியில்  கலந்து  கொண்டது  பற்றியும்  மே  மாதம்  பெர்மாத்தாங்  பாவில்  போலீஸ்  படைத்  தலைவர் பற்றி  அவர்  தெரிவித்த  கருத்துகள்  பற்றியும் விசாரிக்கப்பட்டது.

மே  மாதப்  பேச்சில்  ஐஜிபி-யை  “எடுபிடி”  என்று  அஸ்மின்  இகழ்ந்துரைத்தாராம்.

விசாரணைக்கு  அழைக்கப்பட்டதையே ஒரு  வகை  மிரட்டல்  என்றவர்  கூறினார்.

“பெர்சேயில்  நடந்ததெல்லாம்   அரசமைப்பைப்  பின்பற்றித்தான்  நடந்தது. அது  ஓர்  அமைதியான  பேரணி  என்று உறுதியாக  சொல்வேன்”, என்றார்.

பேரணிக்கு  முதல்  நாள்  பெர்சே 4  டி-சட்டைகளுக்கு  விதிக்கப்பட்ட  தடைக்கு  எதிராக  வழக்கு  தொடுப்பது  பற்றி  தம்  வழக்குரைஞர்கள்  ஆராய்ந்து  வருவதாகவும்  அஸ்மின் கூறினார்.

அவரின்  வழக்குரைஞர்  என். சுரேந்திரன்  அந்த  விசாரணையே “வீண்  விரயம்”  என்றார்.

பெர்சே 4 பேரணி  ஓர்  அமைதிப்  பேரணி.  எனவே  அதன்  தொடர்பான  எதன்மீதும்  விசாரணை  கூடாது  என்றாரவர்.