பத்து கவான் அம்னோ தொகுதி முன்னாள் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசானும் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் முன்னாள் உதவியாளர் மத்தியாஸ் சாங்கும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்விருவரும் 1எம்டிபிமீது பல நாடுகளில் புகார் செய்தவர்களாவர்.
இன்று காலை நியூ யோர்குக்கும் லண்டனுக்கும் செல்லவிருந்ததாக கைருடின் முக நூலில் பதிவிட்டிருந்தார்.
போலீஸ் உத்தரவின்பேரில் குடிநுழைவுத் துறை தம் பெயரைக் கருப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக கைருடின் கூறினார்.
“குடிநுழைவுத் துறையோ போலீஸோ எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.
“விமானப் பயணச் சீட்டு வாங்கியாயிற்று. லண்டனிலும் நியூ யோர்கிலும் தங்கும் வசதிக்கும் முன்பதிவு செய்தாயிற்று. சரியான காரணமின்றித் தடுத்து நிறுத்தப்பட்டதால் எனக்கு நிறைய இழப்பு ஏற்பட்டுள்ளது”, என்றார்.
கைருடின் சாங்குடன் விமான நிலையம் சென்றபோதுதான் அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டது.
இது கூடப் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் நாள் போனால் ‘ஆயி’ போகக் கூடத் தடை விதிப்பார்கள்! அப்படியொரு அரசாங்கம் நமக்கு!
மலாய்க்காரர்களால் வளர்க்கப் பட்ட கட்சியே மலாக்காரர்களுக்கு ஆப்பு வைக்கும் போதுதான் தெரியுதாடா உங்க கட்சியின் இலட்சணம். நீங்க வளர்த்த பூதத்தை உங்களாலையே இன்று கட்டுப் படுத்த முடியவில்லை பார்த்தீர்களா?. இதுதாண்டா செய்வினை என்பது. மாமக்தீர் அனுபவிப்பதும் இதுதாண்டா. இன்று மலாய்க்கார இனமே மாமாக்தீரை மலாய்க்காரனா என்று கேள்வி எழுப்புகின்றதே பார்த்தீர்களா. முன் செய்யின் பின் விளையும். இதுவும் ‘Malay Dilemma’ தான்.
நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க பட்ட பட்டியலில் “அனினா சாடுடின்” பெயரையும் சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க பட்டிருப்பதாக கடைசி தகவல்.
”முன் செய்யின் பின் விளையும் என்பது இதுதான்டா..உங்ககிட்ட தான்டா அவன் கற்றுக்கொன்டான். இப்ப உங்களுக்கே திருப்பி அடிக்குது பாத்தியா.