1எம்டிபிமீது அமெரிக்க எப்பிஐ விசாரணை: WSJ தகவல்

fbiஅமெரிக்கப்  புலனாய்வுப்  பிரிவான  எப்பிஐ  1எம்டிபி  விவகாரம்  மீது  விசாரணைதைத்  தொடங்கியிருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள்  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹாசன்  தடுத்து  வைக்கப்பட்டுள்ள  வேளையில்  இவ்விசாரணை  தொடங்கப்பட்டிருப்பதாக  தகவலறிந்த  வட்டாரமொன்று  தெரிவித்ததாக நிதியியல்  நாளேடான  வால்  ஸ்திரிட்  ஜர்னல்  கூறியது.

கைருடின்  எப்பிஐ அதிகாரிகளைச்  சந்திக்க  அமெரிக்கா  செல்லவிருந்த  வேளையில்  தடுத்து நிறுத்தப்பட்டுக்  கைது  செய்யப்பட்டார்.

ஆனால், கைருடின்  அமெரிக்கா  வருவது  பற்றி  எப்பிஐ-க்குத்  தெரியாது  என்று  WSJ கூறியது.

“எப்பிஐ  நியூ  யோர்க்  அலுவலகப்  பேச்சாளர்  ஒருவர்  கைருடினைச்  சந்திக்க  தம்  அலுவலக  முகவர்  எவரும்  ஏற்பாடு  செய்யப்படவில்லை என்றும்  இதற்குமுன்  எப்பிஐ  அவரைச்  சந்தித்ததில்லை  என்றும்  கூறினார்”, என  WSJ  குறிப்பிட்டிருந்தது.