வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசான் விசாரணைக்காக நீண்ட காலத்துக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைச் சாடினார்.
“மேல் நடவடிக்கைக்காகக் காவலில் வைப்பதே தண்டனை ஆகிவிடக் கூடாது. ஆறு நாள்களுக்கு அவரைக் காவலில் வைப்பது அதிகாரமீறல் என்றே நினைக்கிறேன்.
“இவ்வளவு நீண்ட காலத்துக்குக் காவலில் வைப்பதைக் கண்டு அதிர்ந்து போனேன். காவல் நடைமுறை தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்”. கைருடின் கைது செய்யப்பட்டது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்கப்பட்டதற்கு அம்பிகா இவ்வாறு கூறினார்.
இனம் பார்பதில்லை நம் சமுதாயம் .உன்னை தான் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் .
இல்லாவிடில் பிறகு எப்படி ஆட்சியில் இருப்பது? அடிக்கி ஆள்வதே உங்களின் தனித்தன்மை ஆயிற்றே – இதுதான் மூன்றாம் உலக புத்தி.