பினாங்கு கெரான் பேராளர்களிடையே உரையாற்றிய கட்சித் தலைவர் மா சியு கியோங், எதிர்வரும் பொதுத் தேர்தலில் “மிகப் பெரிய சுனாமி” ஏற்பட்டு அதில் பிஎன் மொத்தமாக அடித்துச் செல்லப்படலாம் என்று எச்சரித்தார்.
மக்களின் ஆதரவு எதிரணி பக்கம் திரும்பலாம் என்பதைத்தான் சுனாமி என்று அவர் குறிப்பிட்டார்.
பிஎன் தலைவர்கள் அக்கூட்டணியில் பலவீனங்கள் உள்ளதை ஒப்புக்கொள்வது முக்கியம் என்று மா கூறினார்.
பிஎன் உறுப்புக் கட்சிகள் ஒன்று மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
நாடு முழுக்கப் பயணம் செய்ததில் பலரைச் சந்தித்தாக அவர் சொன்னார். மக்கள் தனித்தனித் துருவங்கள்போல் பிரிந்து கிடப்பதும் இன்றைய அரசியல் போக்கும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
“தவறுகள் செய்ததை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நானும் பிஎன்னின் ஒரு பகுதிதான்”, என்று சுமார் 200 பேராளர்களிடம் பேசியபோது மா கூறினார்.
அப்பாடா இப்பதான் ஒருத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டு வாய் மலர்ந்திருக்கின்றார்!. சிகப்புச் சட்டை பேரணிக்கு ஒப்புக் கொள்ளாமல் ஏற்றுக் கொள்கின்றோம் (‘agree to disagree’) என்று தே.மு. பங்காளிக் கட்சிகள் பெரும்பான்மையாக தெரிவித்தன என்று அறிக்கை வெளியிடப்பட்டதோ அன்றே தே.மு. – க்குள் வெளிப்படையாகவே விரிசல் ஏற்பட்டு விட்டது என்பதை அறிந்தோம். தே.மு. பங்காளிக் கட்சிகள் அந்த பேரணியைப் புறக்கணித்ததில் இருந்து அது அமீனோ கட்சியின் சொரூபம் என்றும் அறிந்தோம். இன்று அதனை மெய்பிக்கின்றார் டத்தோ மா. அடுத்து அமீனோ கட்சி தீவீர வலதுசாரிகள் பக்கம் தன்னை வளைத்துக் கொண்டதை ம.சீ.சா – வின் தலைவர் லியாவ் குறை கூறி நேற்று அறிக்கை வெளியிட்டது தே.மு. உடையப் போகும் அபாய சூழலை உருவாக்கியுள்ளது. ஒற்றுமை இல்லாத தே.மு. தேர்தல் களத்தில் மாலுமி இல்லாத கப்பலாகிப் போனால் எதிர்வரும் சூனாமியில் மூழ்கப் போவது திண்ணம். அமீனோ கட்சி இனவாதத்தால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகாலத்தைப் பிரகடனப் படுத்தினால் பொதுத் தேர்தலை அவர்களுக்கு நேரம் சாதகமாகும் வரை ஒத்திப் போடலாம். என்று கனவு கண்டால் அது இரு புறமும் கூர்மையான கத்திப் போல் செயல்படும். இனவாதத்தை ஏற்காத கிழக்கு மலேசிய கட்சிகள் எதிரணியில் கூட்டுச் சேர்ந்தால் அமீநோவும் நிலா கட்சியும் ஒன்று சேர்ந்தால் கூட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது. ம.இ.க. – வைப் பற்றி சொல்லவே வேண்டாம். இனி இருக்கும் 3 பல்லில்லா அமைச்சர்களும் பதவியில்லாமல் பல்லிளித்துக் கொண்டு பட்டித் தொட்டியில் போய் வேலை பார்க்க வேண்டி வரும். ஊழ்வினையை எதிர்கொண்டு தயாராக இருங்கள். சிவத்துரோகம் செய்தவர்களின் நிலைமை இப்படியெல்லாம் போகும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. வாய்மையே வெல்லும்.
வணக்கம் . தேனி சொல்வதை நான் ஆதரிக்கிறேன். இதுதான் இன்றைய சூழல் இதை புரிந்து கொண்டு நாமும் காய் நகர்த்த வேண்டும்.
சீனன் காரியக்காரன்….அடுத்த தேர்தல் பாக்கத்தான் வெற்றி உறுதியாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் சீனர்களின் ஆதிக்கம் அரசியலில் தலை தூக்கிவிடும். சீன அரசியல்வாதிகள் எல்லோரும் இப்போதே தயாராகி வருகின்றார்கள்…..இந்த செய்தி ஓர் உதாரணம் !!!!
ஐயா சிவா கணபதி, இப்படி இன துவேசமாக எழுதுவதை தவிர்க்கவும். எதை மற்றவர்கள் நமக்கு செய்வதை நாம் விரும்ப வில்லையோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடாது.
ஐயா தேனி, எங்கே போனாலும் ” சிவனை ” கையோடு அழைத்து போவது சரி; அரசியலுக்கும்மா ???
சுனாமி எற்பட்டவது ஒரு நல்லது உருவாகட்டும் .
மு.த. நீலவாணன் நான் எழுதிய “சிவத்துரோகம்” தங்களுக்குப் புரியாது. புரிய வேண்டியவர்களுக்குப் புரியும்.
மிஸ்டர் சிவா! சீனர்கள் காரிவாதிகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அம்னோவை போன்று இனவெறியர்கள் அல்ல. இனப்பிரச்சினைகளை தூண்டிவிட மாட்டார்கள் சீனர்கள். அடுத்த பொதுத்தேர்தலில் பாக்கத்தான் வென்று, அதனால் நம் நாடும் சிங்கப்பூரை போன்று ‘அர்த்தமுள்ள’ நாடாக உருவாக்க சீனர்கள் நினைப்பார்களேயானால், அதில் என்ன தவறு? மாற்றத்தை தேடித் போங்கள்.
தேனீ சரியாகத்தானே சொல்கிறார் மு.த.நீலவாணன் அவர்களே
சிவத்துரோகம் என்பதற்கு மறு அர்த்தம் மக்களுக்கு இழைத்த துரோகம் எனப்படுகிறது.உதாரணம் ” மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”
நமக்கு பிடித்தோ பிடிக்காமலோ இருந்தாலும் சீனர்கள் மிகவும் திறமைசாலிகள்– காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்பவர்கள். இவ்வுலகில் எப்படி வாழ முடியும் எப்படி முன்னுக்கு வரமுடியும் எப்படி மற்றவர்களை விட முன்னேற முடியும் எப்படி மற்றவர்களின் கையை எதிர் பாராமல் இருக்க முடியும் என்பதற்கு உதாரணம்– எனினும் இதற்க்கு எல்லாம் காரணம் பணம் அதிகாரம் என்பதும் இவர்களுக்கு தெரியும்– இதனாலேயே இப்போது சீனர்களே இவ்வுலகில் பணக்காரர்கள். ஒரு காலகட்டத்தில் இவர்களை மஞ்சள் தோல் என்று பேசிய வெள்ளையர்கள் இப்போது இவர்களை சம அந்தஸ்த்தோடு பார்கிறார்கள் -ஏன்? இது புரிந்தால் நாம் இப்படி இருக்க மாட்டோம். எல்லாம் கொடுததும் எல்லாம் பிடுங்கியும் மலாய்க்காரன் இன்றும் ஏன் முன்னேற முடிய வில்லை? மலாய்க்காரன் பிடுங்கித்தான் ஏதும் சாதிக்க முடியும் -மற்றவகையில் ஒன்றும் கிடையாது– இது பொதுவாக தான் .எல்லா இனத்திலும் அவர்களின் கலாசாரத்தை பொறுத்து சாதிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள். நாம் சீனர்களிடம் இருந்து எவ்வளவோ நல்லது படிக்க இருக்கிறது. நாம் அனாவசிய பொறாமையுடன் பார்ப்பது தவறு.
சீனன் மாற்றத்தை ஏற்படுத்த கிளம்பிவிட்டான். தமிழன் ?