சிவப்புச் சட்டையினரின் இனவாத வலையில் சிக்கிக் கொள்ளாதீர், அஸ்மி ஷரோம்

 

Sharomnoredshirtsகடந்த புதன்கிழமை சிவப்புச் சட்டையினர் எழுப்பிய இனவாத கூச்சல்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்று மலேசியர்களை மலாயா பல்கலைக்கழக சட்ட விரியுரையாளர் அஸ்மி ஷரோம் கேட்டுக் கொண்டார்.

சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் சீன மக்களை “சீனப் பன்றிகள்” என்று கூப்பிடுவதை நியாயப்படுத்தியை தாம் கேட்ட போது தமது சிந்தனையில் தோன்றியது அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் – மலாய் மாடுகள் (Melayu lembu) என்றாரவர்.

இருப்பினும், அவ்வாறு இருக்கக்கூடாது. ஏன்னெறால் நமது சிவில் சமுதாயம் அதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“சிவில் சமுதாயம் முன்னேறுவதற்கான வழி எது சரியானதோ அதற்காக நாம் கண்டிப்பாக போராட வேண்டும். இனவாத அட்டையை உதறி விடுவோம்.

“எது சரியானதோ நியாயமானதோ அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம். இறுதியில், மக்கள் நாம் எதற்காக போராடுகிறோமோ அது சரியானது என்று ஏற்றுக்கொள்வார்கள்.

“நமக்கு என்ன நேர்ந்தாலும் சரி, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்போம்”, என்று அஸ்மி ஷரோம் இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கருத்தரங்கில் கூறினார்.