அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஹிம்புனான் ரக்யாட் பெர்சத்து பேரணிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவருடன் உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்த பாசிர் கூடாங் மசீச இளைஞர் பகுதியை அங்குள்ள அம்னோ இளைஞர் அணி சாடியுள்ளது.
அதன் தலைவர் அஸ்மான் ஜாப்பார், பாசிர் கூடாங் மசீச இளைஞர் பகுதி அவசரப்பட்டு நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். அம்னோவுக்கு மசீச எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக அம்னோவின் உதவிதான் மசீசவுக்குத் தேவை என்பதை அது மறந்து விட்டது என்றாரவர்.
பொதுத் தேர்தலில் மசீசவின் மோசமான அடைவுநிலை அதற்குச் சீனச் சமூகத்தின் ஆதரவு சரிந்து விட்டதைக் காண்பிக்கிறது.
“நடப்பில் உள்ள சீனர்களின் ஆதரவை நோக்கும்போது, மசீசவின் பலவீனத்தை மலாய்க்காரர்களைக் கொண்டுதான் சரிக்கட்ட வேண்டியுள்ளது”.
ஹிம்புனான் ரக்யாட் பெர்சத்து பேரணி சட்டப்படிதான் நடத்தப்பட்டது என்று கூறிய அவர், ஒன்றுகூடும் உரிமை அரசமைப்பு அளிக்கும் உரிமையாகும் என்றார்.
“இது ஒன்றுபட வேண்டிய நேரம் என்பதை மசீச இளைஞர்கள் உணர வேண்டும். இன உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடாது. அதைக் கொண்டுதான் எதிரணி பிஎன்னை உடைக்கப் பார்க்கிறது”, என்றவர் சொன்னார்.
பாசிர் கூடாங் மசீச பாசிர் கூடாங் மசீச இளைஞர் அணியனருக்கு வாழ்த்துக்கள் . மா இ க இளைஞர் அணியும் இருக்கே .. மானகெட்டவங்கள்
இதிலிருந்து எல்லாருக்கும் தெரியவேண்டிய முக்கிய செய்தி – எங்களை -அம்னோவை- ஊ..விடில் எவருக்கும் ஏதும் கிடைக்காது.
நீதி நியாயம் தேவை இல்லாத ஒன்று கொள்கை தேவை இல்லை குடி உரிமை வெறும் பேச்சுக்குத்தான்
ஆனால் உங்கள் மோட்டார் சைக்களை ‘உர்ர்….உர்ர்…’ என்று ஓட்ட, உங்கள் வயிறை நிரப்ப. நான்கு பொம்மனாட்டிகளை சேர்த்துக் கொள்ள உங்களுக்குச் சீனனின் உதவி தேவை! இன்று நஜிபின் வங்கிக்கணக்கு பொங்கி வழிவதற்கும் சீனன் தான் காரணம்! உண்மையைச் சொன்னால் நீங்கள் ஒரு கோசடப்பா!
பங்காளிகள் சண்டை நடுத் தெருவுக்கு வந்திடுச்சி டோய்!
நீங்கள் உப்பு போட்டு சாபபிடுகிறிர்கள் கொஞ்சம் ரோஷம்உண்டு என்று சொல்லிவிட்டீர்கள்! இந்தியர்களை பிரதிநிதிக்கிறோம் என்றுக் கூவிக்கொல்லும் கட்சிகளுக்கு ஒரு சூடு ,சொரனையே இல்லையா ? “ஓட்டை சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி “அப்படிதானே?
அம்னோ B R M தொகையை இன்னும் கூட கொடுத்து மக்களை சரிபன்னுடும் டோய் .யோசிங்க பாஸ் ………..?
அம்னோ B R I M தொகையை இன்னும் கூட கொடுத்து மக்களை சரிபன்னுடும் டோய் .யோசிங்க பாஸ் ………..?
அந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் பாதி பேருக்கு மேல் சீனர்களிடம் தான் வேலை செய்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டம்
தொகுதி மட்டும் குரல் எழுப்பி என்ன பயன் . மேல் மட்ட குழு இன்னும் இனவாதிகளிடம் உறவு வைத்துள்ளதே. பிறகு எதற்கு இந்த நாடகம்.