ரிங்கிட்டின் பலவீனத்துக்கு 1எம்டிபியே காரணம் என்று ஸெட்டி கூறியிருப்பதை அந்நிறுவனம் மறுக்கிறது

ringgitரிங்கிட்டின்  நடப்புப்  பலவீன  நிலைக்கு  1எம்டிபியைக்  காரணம்காட்டிய  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்தார்  அசீஸின்  செயல்  ஏமாற்றமளிப்பதாக  அந்நிறுவனம்  கூறியது

எண்ணெய் விலையில்  ஏற்பட்ட  திடீர்  விலை  இறக்கம், அமெரிக்காவில்  வட்டி  விகிதம்  உயரக்கூடும்  என்ற  எதிர்பார்ப்பு, வளரும்  பொருளாதாரங்களில்  ஏற்பட்ட  சுணக்கம்  முதலிய  காரணங்களினால்,  ரிங்கிட்  உள்பட  நோர்வேயின்  கொர்னர்,  ஆஸ்திரேலியாவின்  டாலர், ரஷ்யாவின்  ரூபல்,  பிரேசிலின்  ரியல் போன்ற  நாணயங்களின்  மதிப்பு  குறைந்ததை  அனைவரும்  அறிவர்  என  அந்நிறுவனம்  கூறிற்று.

“இவ்வேளையில்,  1எம்டிபி-இன்  கடன்களைவிட  அதன்  சொத்துகளின்  மதிப்பு  அதிகம்  என்பதைக்  கவனத்துக்குக்  கொண்டுவர  விரும்புகிறோம்”, என 1எம்டிபி இன்று  வெளியிட்டிருந்த  அறிக்கை  கூறியது.

“மேலும், 1எம்டிபி  உள்நாட்டு  வெளிநாட்டுக்  கடன்  கொடுப்பாளர்களுக்கு  முதலையும்  வட்டியையும்  தவறாமல்  செலுத்தி  வந்திருப்பதை   ஸெட்டி  நன்றாகவே  அறிவார்”, என்று  அது  தெரிவித்தது.

இந்த  உடனடி  விளக்கம்  சம்பந்தப்பட்டவர்களுக்குத்  தெளிவை  ஏற்பட்டிருக்கும்  என்று  அந்நிறுவனம்  நம்புகிறது.

1எம்டிபி  அதன்  பிரச்னைகளுக்குத்  தீர்வு  கண்டால்  ரிங்கிட்  தலைநிமிரும்  என்று  ஸெட்டி  நேற்று  கூறியதாக  அறிவிக்கப்பட்டிருந்தது.