பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ள பாசீர் கூடாங் மசீச இளைஞர் பகுதி செய்துள்ள முடிவால் அம்னோ, மசீச உறவு நலிவடைந்துள்ளது.
இப்படிப்பட்ட செயலை நாடும் அந்த மசீச இளைஞர் அணி ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவதே மேலானது என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் மசீச இளைஞர் பகுதி சம்பந்தப்பட்ட பாசீர் கூடாங் இளைஞர் பகுதிமீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் ஹிம்புனான் ரக்யாட் பெர்சத்து பேரணிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவருடன் உறவுகளை முறித்துக்கொள்ள பாசிர் கூடாங் மசீச இளைஞர் பகுதி முடிவு செய்தது.
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ம இ கா மாதிரி பாசீர் கூடாங் மசீச இளைஞர் பகுதி மானக்கேட்டவனு நினைச்சுட்டுனா ? மஇகவுக்குத்தான் சூடு சுரணை கிடையாது ..
நல்ல முடிவு மாற்றம் வேண்டம்
இந்த கைரி ஜமாலுதீன் ஏன் எரிச்சல் படனும். மக்கள் பேரணி என்று சொல்லி வெறும் அம்நோகாரன் மட்டும் கலந்து கொண்டு மற்ற இனங்களை அவமானப் படுத்துகிறான் அப்ப எங்க போய் ஒளிந்துக் கொண்டு இருந்தீர்..,?
தவறு செஞ்சிருவாங்க அத தட்டி கேட்டா கொவபடுறாங்க.முதலில் தவறு எங்கே நடக்குது கண்டுபிடிக்கணும் கே ஜே ….
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் உறவுகளை துண்டித்து கொள்ள வேண்டும் என கூறிய பாசீர் கூடாங் மசீச இளைஞர் பகுதியினர் மீது சீறும் கைரி ஜமாலுடின், அமெரிக்காவில் நஜிப் மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துகள் மீது விசாரணை நடத்தபடும் என்பதற்காக அமெரிக்கா மீது சீறாமல் மௌனம் காப்பதை பார்த்தால், அமெரிக்காவுக்கு ஆதரவாக கைரி ஜமாலுடின் செயல் படுகிறாரோ என தோன்றுகிறது.
கைரி சிறந்த நடிகன் ! என்ன, அம்மணமா நடிக்கிறான் !