முகைதின்: மற்ற இனங்களைப் புறக்கணிப்பது ஆபத்து

mhமலேசியாவில்  எந்தவொரு  அரசியல்  கட்சியும்  அதன்  பாரம்பரிய  ஆதரவுத்  தளத்துக்கு வெளியில்  உள்ளவர்களின்  நலனையும்  கருத்தில்கொள்ள  வேண்டும்  அப்படிச்  செய்யாது  போனால்  தேர்தலில்  வெற்றி  பெறுவது  நடவாத  செயல்  என்கிறார்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்.

“அரசியல்  கட்சிகள்  மலாய்க்காரர்கள் மற்றும்  சாபா,  சரவாக்  சுதேசி  மக்களின்  சிறப்புச்  சலுகைகள்  பற்றிக்  கேள்வி  எழுப்புவது   அவற்றுக்கு  ஆபத்தாக  முடியும். தேர்தலில்  பெரும்பான்மை  ஆதரவு அவர்களுக்குக்  கிடைக்காது.

“அதேபோல் மற்ற இனங்களின்  நியாயமான  நலன்களுக்குக்  குழிபறிக்க  முனையும்  கட்சிகள்  கணிசமான  வாக்குகளை  இழக்க  நேரும். அவற்றால்  ஒரு  தேசிய  அரசாங்கத்தை  அமைக்க  இயலாது”. திங்கள்கிழமை  சரயேவோவில்  அனைத்துலக  அமைதி  மாநாட்டில்  உரையாற்றியபோது  முகைதின் இவ்வாறு  கூறினார்.