அமெரிக்காவில் நஜிப் மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துகள்மீது விசாரணை

nytஅமெரிக்க  அதிகாரிகள்  பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள்  புரிந்துள்ளதாகக்  கூறப்படும்  ஊழல்களை  ஆய்வு செய்வதாக  நியூயோர்க் டைம்ஸ் (என்ஒய்டி)   தெரிவித்துள்ளது..

பிரதமரின் வளர்ப்பு மகன்  ரிசா  அசீசுக்குச்   சொந்தமான  நிறுவனம்  அண்மைய  ஆண்டுகளில்  அமெரிக்காவில் வாங்கியுள்ள சொத்துகள் மற்றும் நஜிப்பின்  குடும்ப  நண்பர்  ஒருவரின்  சொத்துகள்  மீதும்  விசாரணை நடத்தப்படுவதாக என்ஒய்டி  கூறியது..

அமெரிக்க  நீதித்  துறையில்,  அனைத்துலக  ஊழல்களை  விசாரிப்பதற்காகவுள்ள  ஒரு  பிரிவு  புலனாய்வுகளை  மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க வங்கி  ஒன்றிலிருந்து மலேசியாவில்  உள்ள நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு   மாற்றிவிடப்பட்டதாக  நம்பப்படும் யுஎஸ் $681மில்லியன்  குறித்தும் விசாரணை அதிகாரிகள்  ஆய்வு செய்வதாக என்ஒய்டி  கூறிற்று.