டேய்லர் பல்கலைக்கழகத்துக்கு உதவிச் சம்பளத்தை நிறுத்துவதில் இனவாதம் தெரிகிறது: மசீச சாடல்

taylorவருங்காலத்தில்  டேய்லர்’ஸ்  பல்கலைக்கழக  மாணவர்களுக்கு  உதவிச்  சம்பளம்  வழங்குவதில்லை  என  மஜ்லிஸ்  அமானா  ரக்யாட்  செய்துள்ள  முடிவில்  இனவாதம்   பளிச்சிடுகிறது  என  மசீச  சாடியது.

அதனை  அறிவித்த  புறநகர்,  புறநகர்  மேம்பாட்டு அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்,  அவர்  “இனவாதி”  என்பதை  மேலும்  உறுதிப்படுத்திக்  கொண்டிருக்கிரார்  என  மசீச  பிரச்சாரப்  பிரிவுத்  தலைவர்  சாய்  கிம்  சென்  கூறினார்.

“இஸ்மாயில்  சப்ரி ‘சீனர்  வர்த்தகத்தைப் புறக்கணிப்பீர்’ என்று அறைகூவலை  விடுத்த  அமைச்சர்  என்பது  எல்லோருக்கும்  தெரியும்.

“இப்போது  மாரா  சார்பாக  அவர்  செய்துள்ள  அறிவிப்பால்  ஏற்கனவே. கந்தலாகிக்  கிடக்கும் இனவாதி  என்ற அவரது  பெயர்  மேலும்  மோசமடையும்.”, என்றாரவர்.

இஸ்மாயில்  சப்ரி,நேற்று,  டேய்லர்’ஸ்  பல்கலைக்கழகத்தில்  பயிலும்  மாணவர்களுக்கு  மாரா  இனிமேல்  நிதியுதவி  செய்யாது  எனக்  கூறினார். அதற்குக்  காரணம்  கூறப்படவில்லை.