மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடும் பெர்காசா நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே வகைப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற சிவப்புச் சட்டை பேரணியில் சீனமொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து பெர்காசாவின் இக்கோரிக்கை வெளிவந்துள்ளது.
மலேசியாவில் இன உறவுகள் நன்றாக இல்லை, ஏனென்றால் குழந்தைகள் வெவ்வேறான சமூகங்களில் வளர்கின்றனர் என்று பெர்காசாவின் கல்விப் பிரிவு தலைவர் சிராஜுடின் சாலே கூறினார்.
“அவர்கள் பள்ளிக்கூடத்தை விட்ட பின்னர்தான் நண்பர்களாகின்றனர், சகித்துக்கொள்ளும் தன்மையைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர்.
“பகசா மலேசியாவை போதனை மொழியாகக் கொண்ட ஒரே வகைப்பள்ளி வழியாக சமுதாய நிலைத்தன்மை மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கையை பெர்காசா கொண்டுள்ளது. அது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே செய்யப்பட்டிருக்க வேண்டும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஒற்றுமையை முன்நிலைப்படுத்தி அமைதியை நேசிக்கும் அனைத்து மலேசியர்களாலும் இது ஆதரிக்கப்பட வேண்டும் என்றாரவர்.
ஒரே வகைப்பள்ளி என்பதன் மூலம் ஆங்கில மொழியில் ஏற்றம் காண்பதற்கான முயற்சிகள் தள்ளி வைக்கப்படும் என்றாகாது என்று அவர் மேலும் கூறினார்.
எல்லாம் தாய்மொழிப்பள்ளியால் வந்த வினை!
தொடக்கப்பள்ளி அளவில் ஒருமைப்பாடு இல்லாததற்கு தாய்மொழிப்பள்ளிகள்தான் காரணம் என்று பிரதமர் துறை அமைச்சர் வாஹிட் ஒமார் புலம்பியிருந்தார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பெர்காசா இந்த கோரிக்கையை வெளியிட்டுள்ளது.
“நம்மிடையே ஒருமைப்பாடு இல்லாததற்கான காரணங்களில் ஒன்று நமது குழந்தைகள் அவர்களின் தொடக்கப்பள்ளி அளவிலான படிப்பை வெவ்வேறான பள்ளிகளில் மேற்கொண்டது.
“இது நாம் சமாளித்தாக வேண்டியதாகும். அப்போதுதான் நமது குழந்தைகள் ஒரே பள்ளியில், ஒரே வகைப்பள்ளியில், கல்வி கற்க முடியும்”, என்று வாஹிட் ஒரு கருத்தரங்கில் பேசியதாக கூறப்படுகிறது.
போங்கடா மண்ணாங்கட்டி மடையன்களா…! இப்பவே இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறிங்க இதல ஒரேப் பள்ளியில படித்தா மட்டும் ஒற்றுமை ஓங்கிடுமா…? மலாய்ப் பள்ளியில் படிக்கிற பிற இன பிள்ளைகளை அறிவு கெட்ட ஆசிரியர்கள் பண்ணுகிற அநியாயங்களை பார்த்துகிட்டு தானே இருக்கிறிங்க. பிற இன தாய் மொழிக் கல்வியை அழிக்க நல்லா திட்டம் போடுரிங்க்கடா…?
முதலில் bangsa malaysia என்று அமுல் செய்யவும் .
bangsa melayu/cina/india ; bumi/nonbumi என்பதை அழிக்கவும்.
இந்த நாடில் இனவாதம் பேசுவதே இந்த அம்னோதான் ! மொழியை ஒழித்தால் இனத்தை ஒழிக்க வடதியாக இருக்கும் என்பதுதானே உங்கள் கணக்கு ? இந்தோனிசிய சீன மாது தனது குழந்தைகளிடம் இந்தோனிசிய மொழியில் பேசுவதை பார்த்து நிலைகுத்தி நின்றேன் ! பாவிகளா மற்றவர் மொழியை ஒழிக்க முயலாதிர்கள் !
அரசாங்க வேலைகள் அனைத்திலும் எல்லா இனத்தினருக்கும் சம வாய்ப்பு கொடுத்தால் Ina ஒற்றுமைக்கு வழிவகுக்கும் . இன்று இங்குபிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மண்ணின் மைந்தர்களே என்று உணர்வை ஊட்டினால் அதுவும் இன ஒற்றுமைக்கு இட்டுச்செல்லும் .
இன ஒற்றுமை தவறாக இருபது பள்ளியில் அல்ல…சரியாக சொல்லவேண்டும் என்றால் அரசியலில் தான் தவறாக கையலபடுகிறது உதாரணம் சிவப்பு சட்டை யார் ஏற்பாடு?
பூமிபுத்ரா என்ற சிறப்பு சலுகை சுலோகத்தை உடனே அகற்றவம்
அதன் பிறகு ஒற்றுமை பற்றி பேசலாம்.
ஏன் எதையாவது கழற்றி அடித்து விட்டு பின்பு மன்னிப்பு கேட்கவா?எங்களுக்கு தெரியும் உங்கள் ஒற்றுமையைப்பற்றி…
தாய் மொழிக்கு அர்த்தம் தெரியாத கோமாளிகள் .
இந்தோனிசியாவில் ஒரே மொழி கொள்கைதான் .அனாலும் அங்கேயும் இன கலவரம் , மத கலவரம் நடக்க வில்லையா ?
மனிதர்களை பிரித்தாளும் மனிதர்கள் திருந்தினாலே போதும் . எல்லாம் சரியாகிவிடும்.
பெர்காச, இஸ்மா போன்ற இனவாத அமைப்புக்களை இந்நாட்டில் ஒழித்தால் மக்களிடையே ஒற்றுமை வந்து விடும். தாய் மொழி பள்ளிகளை அழிப்பதால் இன ஒற்றுமை வந்து விடப் போவதில்லை. இந்நாட்டிற்கு அழிவு காலம் வந்து விட்டது போலும்.
இது தான் நமது கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்தில் தேசிய மொழிக்கும் மலேசியாவில் இதர மொழிகளுக்கும் உள்ள உரிமைகள்
GENERAL AND MISCELLANEOUS
National language
152. (1) The national language shall be the Malay language and shall be in such
script as Parliament may by law provide:
Provided that—
(a) no person shall be prohibited or prevented from using (otherwise than
for official purposes), or from teaching or learning, any other language;
and
(b) nothing in this Clause shall prejudice the right of the Federal
Goverment or of any State Government to preserve and sustain the use and
study of the language of any other community in the Federation.
(2) Notwithstanding the provisions of Clause (1), for a period of ten years after
Merdeka Day, and thereafter until Parliament otherwise provides, the English
language may be used in both Houses of Parliament, in the Legislative Assembly
of every State, and for all other official purposes.
123
(3) Notwithstanding the provisions of Clause (1), for a period of ten years after
Merdeka Day, and thereafter until Parliament otherwise provides, the authoritative
texts—
(a) of all Bills to be introduced or amendments thereto to be moved in
either House of Parliament; and
(b) of all Acts of Parliament and all subsidiary legislation issued by the
Federal Government,
shall be in the English language.
(4) Notwithstanding the provisions of Clause (1), for a period of ten years after
Merdeka Day, and thereafter until Parliament otherwise provides, all proceedings
in the Federal Court, the Court of Appeal or a High Court shall be in the English
language:
Provided that, if the Court and counsel on both sides agree, evidence taken in the
language spoken by the witness need not be translated into or recorded in English.
(5) Notwithstanding the provisions of Clause (1), until Parliament otherwise
provides, all proceedings in subordinate courts, other than the taking of evidence,
shall be in the English language.
(6) In this Article, “official purpose” means any purpose of the Government,
whether Federal or State, and includes any purpose of a public authority.
வணக்கம். ஒரே பள்ளி முறை கேட்பதற்கு நன்றாய் இருக்கிறது. ஆனால், முதலில் அரசாங்க பாரங்களில் உள்ள இனம் எனும் பகுதியை முதலில் நீக்கி விட்டு அப்புறம் பேசுங்கள். ஆரம்ப பள்ளியில் ஒன்றாய் படித்துவிட்டு பிறகு மேல்கல்வி செல்லும் போது உங்கள் பிள்ளைகளை பூமிபுத்திரா என்று சொல்லி தனியா கரைசேர்க்க பாடுபடுவிங்க. யு ஐ தி எம் ,யு ஐ எ எம் , கியத்மார, போலிடெக்மார ஆகியவற்றில் கோட்டா அடிப்படையில் தான் சீட் கொடுக்கிறீங்க. உங்க லச்சணம் எங்களுக்கு தெரியாதா.
இவர்கள் நோக்கம் தமிழ் பள்ளிகள் மூடவேண்டும்.முதலில் பூமிபுத்ர அந்தஸ்து ,சமரீதியில் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு ,வியாபார/பொருளாதார வாய்ப்பு, உயர்பதவிகள் வாய்ப்பு எல்லாம் தமிழர்களுக்கு கொடுத்த பிறகு ஒற்றுமை இல்லை என்றால் ஒரே மொழி பள்ளி பற்றி பேசவும்.
boleh buat tapi bagi satusus bumiputera kepada semua bangsa
bagi masuk ASB,beli rumah dapat diveiden kerja sama rata
baru u cakaplah belecan.
நண்பர்கள் மேலே சொல்லியுள்ள ஒவ்வொரு பின்னூட்டங்களை பட்டியலிட்டால் ஒற்றுமை ஏற்படாததற்கான காரணம் தெளிவாகிறது.
இவனுங்க மலாய் பள்ளியை இஸ்லாம் பள்ளி போல நடத்திக்கொண்டு, மற்ற சமயத்தவர்களை எப்படி கவர முடியும். இந்த ஒரே பள்ளி வந்தால் ஒரு தமிழனோ சீனனோ கண்டீன் நடத்த முடியுமா? ஒரு தமிழனோ சீனனோ தலைமையாசிரியராக முடியுமா? உதவித் தலைமையாசிரியர்களாக ஆகத்தான் முடியுமா? நாட்டில் ஒற்றுமை இல்லாததற்கு முழு முதற் காரணம் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
அடா, முட்டாள்களே, பள்ளிகள் எதற்கு இருக்கின்றன? மாணவர்களுக்கு அறிவைப் புகட்டவா அல்லது இன ஒற்றுமையை வளர்க்கவா? இன ஒற்றுமையை வளர்ப்பதற்கு உங்களுக்கு வேறு வழியே தெரியவில்லையா? இதை மூட வேண்டும்…. அதை மூட வேண்டும்…. கோயில்களை இடித்துத் தள்ள வேண்டும்…. ஆலயங்களில் சிலுவை இருக்கக் கூடாது…. என்று ஆக்கங்க கெட்ட கூவைகள் மாதிரி பெர்காசா பேசுவதைக் கேட்கும் போது குமட்டிக் கொண்டு வருகிறது.
சீனர்கள், இந்தியர்கள் மத்தியில் இன சகிப்புத் தன்மை நன்றாகதான் இருக்கிறது. ஆனால், மலாய்க்காரர்களுக்குதான் அது குறைகிறது. மாணவர்களை தேசிய சேவை பயிற்சி போன்றவற்றுக்கு அனுப்பும் போது கூட மலாய்க்காரர்களை சீனர்களோடு ஒரு அறையில் தங்க வைக்க முடியாத நாதாரிகள் ஒரே வகைப் பள்ளி வேண்டும் என்று கேட்கிறார்கள். இஸ்லாமிய மாணவர் இஸ்லாமியரல்லாத ஆசிரியர் கையில் முத்தமிடக் கூடாதாம் …. இப்படி இஸ்லாமிய சமயப் பாடப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. எவ்வளவு எதிர் மறையான உபதேசம்? இந்த இலட்சணத்தில் இன ஒற்றுமையைப் பற்றி புலம்புகிறார்கள்.
முதலில் சீனர்களிடம் நாட்டை எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்று கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தால் பிறகு ஒரே வகைப் பள்ளியைப் பற்றிப் பேசலாம்.
இன்னும் புரிய வேண்டுமானால் ஒரே வகை இஸ்லாமியப் பள்ளிகள் என்று சொல்லுங்கள்! அது தான் உங்களுக்கும் புரியும்; எங்களுக்கும் புரியும். அதன் பிறகு ஒற்றுமை அரபு நாடுகளைப் போல கொடிகட்டிப் பறக்கும்!
பரிசான் நேசனல் கட்சியைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளில் எல்லா இனமும் அங்கத்தினராக இருக்கிறார்கள்.ஆனால் மலாயர்.சீனர்,இந்தியர் என்று பிரிக்கப்படவில்லை. ஆனால் பி.என்.மட்டும் மூவினங்களையும் பிரித்து ஆளுகிறது. இதுதான் ஒற்றுமையோ? மக்களை பிரித்து ஆளுவதுதான் மலேசிய அரசியல் தலைவர்களின் நரி தந்திரம். இன பிரச்சனையை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படுவதுதான் மலேசிய அரசியல்.
இவங்களுக்கு என்ன இப்போது நம்மை எல்லாம் அதை வெட்ட வேண்டும்–ஆனால் நாம் வெட்டினாலும் நாம் பூமி புத்ரா ஆக முடியாது.
ஆடு நனையுதேன்னு பிணம் தின்னும் சைத்தான் பேசுது
நண்பர் கீரனும் ,ஜோன்சன் விக்டரும் குறிபிட்டது நூற்றுக்கு நூறு உண்மை மலாய் பள்ளியை ஒரு இஸ்லாம் பள்ளியை போலதான் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் ,
மாற்று இன பிள்ளைகள் படும் பாடு பெரும் வேதனைகுரியாதாக இருக்கிறது . இவர்களுடய உல் நோக்கம் மற்ற இன உணவுகளையும் மதங்களையும் அளிக்க நினைப்பதே .. இநாட்டில் இனப்ரிவிற்கு முக்கிய காரணமே அரசியலையும் இஸ்லாத்தையும் ஒருங்கிணைத்து மக்களை வழி நடத்துவதால் தான் .
அட மடையனே ,,ஏண்டா பகல் கனவு காணுறே ? ஒற்றுமை என்ற பெயரில் தமிழ் பள்ளிகளை அளிப்பதா,,தமிழ் பள்ளி மீது கை வைத்தால் ரத்த ஆறு ஓடும் ,
இந்த கூறு கேட்ட MIC – MCA ஈன ஜென்மங்கள் அம்னோவை நக்கிகொண்டிருந்தால் தமிழ் பள்ளிகளை கவனிக்க அந்த ஈன ஜென்மனகளுக்கு என்ன வேர்த்தா வடிகிறது. இந்த கம்மனாட்டிளினால் தான் இவ்வளவும்.
என் தாய் தமிழ் சொன்ன கதையில் நம் நாட்டு கல்வித் தரத்தைப் பற்றி பள்ளியிலும் பல்கலைகழகங்களிலும் பயிலும் இளைய தலைமுறையினர் கொடுக்கும் தகவலைக் கொண்டு “இந்நாட்டு கல்வித் துறை தறிகெட்டுப் போகின்றது” என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். அந்த அளவிற்கு மலாய்க்கார ஆசிரியர்களில் ஆங்கிலப் புலமை இல்லாமல் இடைநிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழங்களிலும் வேலை செய்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரியது. இந்நாட்டு வட எல்லையில் இருக்கும் ஓர் அரசாங்க பல்கலைக்கழகத்தில் தன் பெயர் முன் முனைவர் (Dr.) என்று அடையாளமிட்டுக் கொண்டு ‘Statistics’ பாடம் சொல்லிக் கொடுக்க வந்த மலாய்க்கார விரியுரையாளர் ஒருவர் ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி பேசுவதைக் கண்ட நம் இன மாணவர்கள் புலம்புகின்றனர். வெளியே குறை சொல்ல முடியாததால் கிடைத்த மூதேவியைக் கொண்டு அப்பாடத்தில் தேற வேண்டுமே என்று வாய் மூடிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இந்நாட்டின் இன்றைய கல்விமான்களின் நிலை!. இவர்கள் பயிற்றுவிக்கும் மாணவர்களின் நிலை எப்படியோ?
தேனீ குறிப்பிட்டது உண்மையே, தேர்வுக்கு மற்ற இன மாணவர்கள்தான் சிரமப்பட்டு படிக்கவேண்டும், நீங்கள்(மலாய் மாணவர்கள்) அப்படியெல்லாம் சிரமப்படவேண்டிய அவசியமில்லை, உங்களுக்கு நல்ல தேர்வு முடிவு கிடைக்கும் என்று வகுப்பறையில் மழலை ஆங்கிலத்தில் சொல்கிறார் ஒரு மலாய் ஆசிரியை அங்கிருக்கும் மற்ற இன மானவர்களைப்பற்றி அக்கரையே இல்லாமல், நமது நாட்டின் கல்வித்தரம் ரொம்பவும் சரிந்து கிடக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமே.
இவர்களின் இந்த ஏற்றத்தாழ்வான நடவடிக்கையால் நிறைய ஆற்றல் குறைந்தவர்களை மிகப்பெரிய பதவிகளில் வைத்து அழகு பார்க்கின்றனர். பெரும்பாலான அரசாங்க அலுவலகங்களில் உள்ள மலாய் குமாஸ்தாக்கள் பேசும் ஆங்கிலத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றிவிடுகிறது. என்ன செய்வது, புத்தியுள்ள மனிதரெல்லாம் இந்நாட்டில் வெற்றிகொள்வதில்லை, வெற்றி பெற்ற மனிதர் பலரும் புத்திசாலிகளில்லை (சாமர்த்தியசாலிகள் மட்டுமே) 🙁
சூரியகாந்தியே (மஞ்சள் மலர்) உமது வார்த்தைகள் எம்மை காந்தமாக இழுக்கின்றது. உமது கருத்துக்களின் நறுமணம் இன்பமான தென்றல் போன்று நாசி வழி மூளையை துளைக்கின்றது. கலக்குங்கள் செம்பருத்தி வாசகர் மன்றத்தில்.