நஜிப் மீதான விசாரணை தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் மலேசிய போலீசை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை

noorபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  இதர  சிலருக்கும்  எதிராக  அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் grand jury (வழக்கு  தொடுக்கப்  போதுமான  ஆதாரங்கள் இருப்பதை ஆராயும் குழு) விசாரணை  தொடர்பில்  அமெரிக்க  அதிகாரிகள்  மலேசியப்  போலீசாரை  இன்னும்  தொடர்பு  கொள்ளவில்லை  எனப்  போலீஸ்  படைத்  துணைத்  தலைவர்  நூர் ரஷிட்  இப்ராகிம்  கூறினார்.

மேலும், அப்படியொரு  விசாரணை  நடைபெறுவதாகக்  கூறப்படுவது  எந்த  அளவுக்கு  உண்மையானது  என்பதும்  உறுதியாக  தெரியவில்லை  என்று  நூர்  ரஷிட் தெரிவித்தார். ஏனென்றால்  ஒரு  ஊடகச்  செய்தியை  அடிப்படையாகக்  கொண்டுதான்  அவ்வாறு  கூறப்படுகிறது.

“என்னைப்  பொருத்தவரை  அவர்கள்  இன்னும்  எங்களைத்  தொடர்பு  கொள்ளவில்லை.

“அதனால், நான்  கருத்துரைப்பது  சிரமம். சம்பந்தப்பட்ட  நாட்டிடம்தான்  நீங்கள்  கேட்க  வேண்டும்”, என  நூர்  ரஷிட்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.